பக்கம் எண் :

708

தன்னேர் பிறரில் லானைத் தலையால்
     வணங்குவார்
அந்நே ரிமையோ ருலக மெய்தற்
     கரிதன்றே.                         3
2138.







வேக மதநல் லியானை வெருவ
     வுரிபோர்த்துப்
பாக முமையோ டாகப் படிதம்
     பலபாட
நாக மரைமே லசைத்து நடமா
     டியநம்பன்
மேக முரிஞ்சும் பொழில்சூழ் மீயச்
      சூரானே.                         4


பிறர் இல்லாதவனும் ஆகிய மீயச்சூர் இறைவனைத் தலையால் வணங்குவார்
அழகும் நேர்மையும் உடைய தேவர் உலகத்தை எய்துதல் அரிதன்று.

     கு-ரை: பொன் ஏர் கொன்றை-பொன்போலும் அழகிய கொன்றை.
கொன்றையைப் பலபட அருளிய வகையெல்லாம் ஆசிரியரது திருமுறையுள்
ஆங்காங்கு நோக்கி உணர்தல் நன்று. ‘வம்பறா வரிவண்டு மணம்நாற
மலரும் மதுமலர் நற்கொன்றையான் அடியலால் பேணா எம்பிரான்
சம்பந்தன் அடியார்க்கும் அடியேன்’ என்றதில் கொன்றையான் என்று
சிவபிரானைக் குறித்ததன் கருத்து அறியத் தக்கது. அதற்கு ஆதாரமானது
இத்திருப்பாடல்:- ‘கொன்றை சூடி நின்ற தேவை அன்றி ஒன்றும் நன்று
இலோம். ‘இதனை ஆசிரியரே அருளியதால் அவரது குறிக்கோளை நன்கு
அறிந்து கொள்ளலாம். அகலத்தான்-திருமார்புடையவன். மின் ஏர்
சடைகள்-மின்போலும் ஒளிர்கின்ற சடைகளை. தன் நேர் பிறர் இல்லானை-
தனக்குவமையாகப் பிறர் இல்லாத தலைவனை. அவனுக்கு அவனே ஒப்பாம்
என்று, அநந்நிய உவமை உணர்த்தியவாறு. தலையால் வணங்குவார் (க்கு)
இமையோருலகம் எய்தல் (ஆனது) அரிதன்று, மிக எளிது என்றவாறு.
அ+நேர்+இமையோர். உலகம்-அந்த நேர்மையுடைய தேவருலகத்தை.
‘எய்தலரிதன்றே’ என்ற பாடமும் உண்டு.

     4. பொ-ரை: வேகமும் மதமும் உடைய நல்லயானையை வெருவுமாறு
கொன்று அதன் தோலை உரித்துப் போர்த்து உமைபாகராக