2139.
|
விடையார்
கொடியார் சடைமேல் விளங்கும்
பிறைவேடம்
படையார் பூதஞ் சூழப் பாட
லாடலார்
பெடையார் வரிவண் டணையும் பிணைசேர்
கொன்றையார்
விடையார் நடையொன் றுடையார் மீயச்
சூராரே.
5
|
அவ்வம்மையார் பாடப்
பாம்பை இடையின் மேல் கச்சாகக் கட்டிக்
கொண்டு நடனமாடிய பெருமான் மேகந்தோயும் பொழில்சூழ்ந்த மீயச்சூர்
இறைவன் ஆவான்.
கு-ரை:
வேகம்-விரைவுடைய நடை. மதவேகமுமாம். நல்லி யானை
(நன்மை+யானை): . . . உயர்திணை அஃறிணை ஆயிருமருங்கின், ஐம்பால்
அறியும் பண்புதொகு மொழியும். . . மருவின் பாத்திய புணரியல் நிலையிடை
உணரத்தோன்றா. (தொல்காப்பியம். 482.) என்றவாறு, நல்லதாகிய யானை
என்று விரித்துரைத்தற்பாலது. நன்னூற் சூத்திரப்படி, பண்பைவிளக்கும்
மொழி தொக்கதாகக் கொண்டு, விரித்துரைத்தல் குணகுணிபேதம் அறியாக்
குற்றமுடையதாகும். உரி-தோல். பாகம்-இடப்பாகம். படிதம்-வல்லபை. துதி
என்றாரும் உளர். அவர், சந்தர்ப்பத்திற்கேற்பத் தாமே கருதி எழுதியது
அப்பொருள் என்று தோன்றுகின்றது. நாகம்-பாம்பு. அரை-திருஅரை.
அசைத்து-கட்டி. நடம்-திருக்கூத்து. நம்பன்-சிவபிரான். நம்பு-நசை. எல்லா
உயிர்களும் விரும்புதற்குரியவன்.
5.
பொ-ரை: திருமீயச்சூர் இறைவர், விடைக்கொடியை உடையார்.
சடைமேல் விளங்கும் பிறைவேடத்தை உடையவர்.படைகளாக அமைந்த
பூதங்கள் சூழப்பாடியும் ஆடியும் மகிழ்பவர். பெடைகளோடு கூடி ஆண்
வண்டுகள் அணையும் கொன்றைமாலையை அணிந்தவர். காளைபோன்ற
நடையை உடையவர்.
கு-ரை:
விடை ஆர் கொடியார் (பார்க்க: பதி. 197 பா.11).
பிறைவேடம்-பிறையை அணிந்த வேடம். சடைமேல் பிறைவேடம்
விளங்கும். படை ஆர் பூதம்-படையாகப் பொருந்திய பூதங்கள். பாடல்
ஆடலார்-பாடுதலும் ஆடுதலும் உடையார். பெடை-பெண்
|