2140.
|
குளிருஞ்
சடைகொண் முடிமேற் கோல
மார்கொன்றை
ஒளிரும் பிறையொன் றுடையா னொருவன்
கைகோடி
நளிரும் மணிசூழ் மாலை நட்ட
நவினம்பன்
மிளிரும் மரவ முடையான் மீயச்
சூரானே. 6 |
2141.
|
நீல
வடிவர் மிடறு நெடியர்
நிகரில்லார்
கோல வடிவு தமதாங் கொள்கை
யறிவொண்ணார்
காலர் கழலர் கரியி னுரியர்
மழுவாளர்
மேலர் மதியர் விதியர் மீயச்
சூராரே. 7
|
வண்டு. பிணை-மாலை.
பிணையல்-கொன்றைப்பிணை. விடைஆர் நடை-
ஏறுபோல் பீடுநடை (குறள்).
6.
பொ-ரை: திருமீயச்சூர் இறைவன் குளிர்ந்த சடைகளைக்
கொண்டுள்ள முடிமீது அழகிய கொன்றைமாலை, விளங்கும் பிறை
ஆகியவற்றைச் சூடியவன். ஒப்பற்றவன். மணிகள் அமைந்த மாலையுடன்
கைகளைவளைத்து நடனம் புரிபவன்: விளங்குபவனும் அரவினை
அணிந்தவன்.
கு-ரை:
கோலம்-அழகு. ஒளிரும்-விளங்கும். சடைமுடி மேல்
கொன்றையும் பிறையும் உடையான் என்க. கைகோடி-கையை வளைத்து.
நட்டம் நவில் நம்பன்-திருக்கூத்தாடும் சிவபெருமான். நளிரும்-குளிரும்.
மிளிரும்-விளங்கும். அரவம்-பாம்பு.
7.
பொ-ரை: திருமீயச்சூர் இறைவர் நீலகண்டர். நீண்டவர்.
ஒப்பில்லாதவர். அழகிய பலபல வடிவங்கள் தம்முடையனவாகக்
கொண்டு அறிதற்கு அரியராயிருப்பவர். காலிற் கழல் அணிந்தவர்.
|