2142.
|
புலியி
னுரிதோ லாடை பூசும்
பொடிநீற்றர்
ஒலிகொள் புனலோர் சடைமேற் கரந்தா
ருமையஞ்ச |
யானையின்தோலைப்
போர்த்தவர். மழுவேந்தியவர். மேன்மையானவர்.
மதியை அணிந்தவர். உலகைப் படைப்பவர்.
கு-ரை: நீலவடிவர் மிடறு-திருநீலகண்டர்.
நெடியர்-நீண்டவர்.
(உயர்ந்தோங்கிய நிலையின் எல்லையில்லாதவர்). உம்பராலும்
உலகின்னவராலும் தம்பெருமை அளத்தற்கரியான் (தி.1ப.29பா.5).
நுண்ணியான் மிகப்பெரியான். (தி.1ப.61 பா.6) நிகரில்லார்-(அதுலர்).
ஒப்பிலியப்பன். கோலவடிவு தமது ஆம் கொள்கை அறிவு ஒண்ணார்.
பல உருவன் (தி.1 ப.13 பா.2). நானாவித உருவாய் நமையாள்வான் பல
பல வேடமாகும் பரன் தன்மை யாரும் அறிவாரில்லை (தி.2 ப.6 பா.2.).
ஓதி யாரும் அறிவார் இல்லை-ஆர்க்கும் அறிவரியான். காலர் கழலர்-
கழலணிந்த திருவடி உடையார். காலர்-காலரூபர், வாயுரூபர் எனலும்.
கூற்றை உதைத்தவரெனலும் ஆம். கரியின் உரியர்-யானைத் தோல்
உடையவர். மழுவாளர்-மழுவை ஆள்பவர், மழுவாளை உடையவர்.
மேலர் மதியர்-பிறையைச் சடைமேல் அணிந்தவர். மேலானவரும் ஞான
சொரூபரும் ஆம். காலர் கழலர் மேலர் மதியர்: -வடநூலார் மதம்பற்றி
அடைமொழிக்கும் அடைகொளியின் விகுதி கொடுத்துக் கூறியனவாக்
கொள்ளலும் ஆம். நுண்ணறிவால் வழிபாடுசெய்யுங் காலுடையான் (தி.1
ப.5 பா.4). காலனுயிர் செற்றகாலன் (தி.1 ப.45 பா.4) எனலும் அமையும்.
பவமலி தொழிலது நினை விதியா:்- படைப்பவரானவர். அரியானை. . .
கரியானை நான்முகனை. . . பிறவாநாளே (தி.6 ப.1 பா.1). படைத்தளித்
தழிப்ப மும்மூர்த்திகளாயினை (தி.1 ப.128 பா.4). அயனவனாய் (தி.3
ப.13
பா.5). வேதவிதியானை (தி.1 ப.128. 4.) எனதுள்ளம் விடகிலா விதியே
(தி.7 ப.385.) பவமலிதொழிலது நினைவொகு பதுமன் நன் மலரது மருவிய
சிவன் (தி.1 ப.2 பா.1) என்பதில், பிரமனது இதய கமலத்திலிருந்து சிவபிரான்
படைப்பித்தருள்வதாகக் குறித்த உண்மை உணர்க.
8. பொ-ரை:
திருமீயச்சூர் இறைவர் புலியின் தோலாகிய
ஆடையையும் பூசும் திருநீற்றுப் பொடியையும் அணிந்தவர். ஆரவாரித்து
வந்த கங்கையை ஓர் சடைமேற் கரந்தவர். உமையம்மை அஞ்ச வலிமையான
திரண்ட தோள்களையும் வன்கண்மையையும் உடைய அரக்கர்கோனை மெலியுமாறு மலையின் கீழ்
அடர்த்தவர்.
|