|
வலிய
திரடோள் வன்க ணரக்கர்
கோன்றன்னை
மெலிய வரைக்கீ ழடர்த்தார் மீயச்
சூராரே.
8 |
2143.
|
காதின்
மிளிருங் குழையர் கரிய
கண்டத்தார்
போதி லவனு மாலுந் தொழப்பொங்
கெரியானார்
கோதி வரிவண் டறைபூம் பொய்கைப்
புனல்மூழ்கி
மேதி படியும் வயல்சூழ் மீயச்
சூராரே.
9 |
கு-ரை: உரிதோலாடை நீற்றார்-உரித்த
தோலாகிய ஆடையையும்
பூசும் திருநீற்றுப் பொடியையும் உடையவர். ஒலிகொள்புனல்-முழக்கத்தைக்
கொண்ட கங்கை வெள்ளத்தை. ஓர்சடை-ஒப்பற்ற சடை. ஓர்தற்குரிய
ஞானமாகிய சடை எனலுமாம். ‘பொன்றயங் கிலங் கொளிந் நலங்குளிர்ந்த
புன்சடை பின்றயங்க ஆடு வாய்’ (பதி. 310 பா.6). ‘நுண்சிகை ஞானமாம்’
(திருமந்திரம்) கரந்தார்-மறைத்தவர். உமை-உமா தேவியார். திரள்
தோள்-திரண்ட புயங் களையும். வன்கண்-அகத்திலுள்ள வலிமையைப்
புறத்தே காட்டும் கண்களையும் உடைய, அரக்கர்கோன்-அரக்கர்க்குக்
கோமகன். அவனை அடர்த்தார்-வரையின் கீழ் மெலிய அடர்த்தார்.
அடைத்தவர் மீயச்சூரிலுள்ளார்.
9. பொ-ரை:
வரிவண்டுகள் மலர்களைக் கோதி ஒலிசெய்யும்
பூம்பொய்கைப் புனலில் எருமைகள் மூழ்கி வயல் கரைகளில் சென்று
படுக்கும் திருமீயச்சூரில் மேவும் இறைவர், காதில் விளங்கும் குழையை
அணிந்தவர்: கரிய கண்டத்தினர்: தாமரையோனாகிய பிரமனும் திருமாலும்
தொழப் பொங்கிய எரிவடிவாய் நின்றவர்.
கு-ரை: மிளிரும்-விளங்கும். குழையார்-குழையை
அணிந்தவர்.
குழை-தழை, ஓலை, குழை என்பன பண்டைய வழக்கத்திற்
காரணப்பெயராயிருந்தன; ‘மரக்கால்’ போல. பொற்கலனானபின்னும்
குழை என்ற பெயராலே வழங்கப்படுகின்றது. இருப்புத் தகட்டாலான
|