2144.
|
கண்டார்
நாணும் படியார் கலிங்க
முடைபட்டைக்
கொண்டார் சொல்லைக் குறுகா ருயர்ந்த
கொள்கையார்
பெண்டான் பாக முடையார் பெரிய
வரைவில்லா
விண்டார் புரமூன் றெரித்தார் மீயச்
சூராரே.
10 |
2145.
|
வேட
முடைய பெருமா னுறையு
மீயச்சூர்
நாடும் புகழார் புகலி ஞான
சம்பந்தன் |
பின்னும் மரக்கால்
என வழங்கப் படுவதுபோல, பத்திரம் எழுதினான்
என்பது முதலியவற்றையும் நோக்குக. கரியகண்டத்தார்-திருநீலகண்டர்.
போது-பூ. போது இ(ல்)லவனும்-தாமரைப் பூவை இல்லமாக உடைய
பிரமனும். பொங்கும் எரி-மிக்க தீ. வண்டு கோதி அறை பூ என்க.
பொய்கை-குளம். மேதி-எருமை.
10. பொ-ரை: கண்டவர் நாணும்படியாக
ஆடையின்றித் திரியும்
சமணர், கலிங்கமாகிய பட்டாடையை உடுத்த தேரர் ஆகியோர்
கூறுவனவற்றை உயர்ந்த சிவநெறிக் கொள்கையர் குறுகார். திருமீயச்சூர்
இறைவர் பெண்ணைப் பாகமாக உடையவர். பெரிய மலையாகிய வில்லால்
பகைவரின் முப்புரங்களை எரித்தவர்.
கு-ரை: கண்டார் நாணும்படியார்-திகம்பர
சைனர். ஆடையில்லாதவர்.
கலிங்கம். . . கொண்டார்-ஆடை உடைய தேரர். முடை என்று கொண்டு
நாற்றம் எனலுமாம். கலிங்கமாகிய பட்டுடையை என்றலே பொருத்தம்.
உயர்ந்த கொள்கையார் ( சைவர்) அவ்விருதிறத்தவர் சொல்லைக் குறுகார்
என்க. பெண்தான்பாகம்-மங்கைபங்கு. விண்டார்-பகைவர்.
11. பொ-ரை:
பற்பல வடிவங்களைக் கொண்டருளிய பெருமான்
உறையும் திருமீயச்சூரை விரும்பும் புகழார்ந்த புகலி ஞானசம்பந்தன்
அருளிய பாடலாகிய தமிழ் ஈரைந்தையும் மொழிந்தும் நினைத்தும் ஆடும்
அடியவர் அகன்றவானுலகை அடைவர்.
|