பக்கம் எண் :

714

பாட லாய தமிழீ ரைந்து
     மொழிந்துள்கி
ஆடு மடியா ரகல்வா னுலகம்
     அடைவாரே.                     11


                    திருச்சிற்றம்பலம்


     கு-ரை: வேடம்-‘பலபல வேடம்’ ‘ஒன்றும் பலவும் ஆய வேடத்து
ஒருவர்’ (தி.1 ப.68 பா.5) (ஞானவேடம்). மீயச்சூர் நாடும் புகழ் ஆர்-
திருமீயச்சூரை விரும்பும் புகழ் நிறைந்த (ஞானசம்பந்தர்). ‘புகழார்’
சிவபிரானாகக் கொண்டு, அவரது புகலி எனலும் பொருந்தும். பாடல் ஆய
தமிழ் ஈரைந்தும் என்றது இத்தமிழ்த் திருப்பதிகத்தை உணர்த்திற்று. உள்கி-
நினைத்து. அடியவர், உள்ளம் உரை உடல் மூன்றாலும் முறையே முறையே
மொழிந்தும் உள்கியும் ஆடியும் இத்தமிழால் சிவ பிரானை வழிபட்டால்
வீடு பெறுதல் திண்ணம் என்றவாறு.

திருஞானசம்பந்தர் புராணம்

தக்க அந்தணர் மேவும்அப் பதியினில்
     தான்தோன்றி மாடத்துச்
செக்கர் வார்சடை அண்ணலைப் பணிந்திசைச்
     செந் தமிழ்த் தொடைப்பாடி
மிக்க கோயில்கள் பிறவுடன் தொழுதுபோய்
     மீயச்சூர் பணிந்தேத்திப்
பக்கம் பாரிடம் பரவநின் றாடுவார்
     பாம்புர நகர்சேர்ந்தார்.

                          -சேக்கிழார்.