2147.
|
மேவா
வசுரர் மேவெயில் வேவ
மலைவில்லால்
ஏவா ரெரிவெங் கணையா லெய்தா
னெய்துமூர்
நாவா னாத னாம மோதி
நாடோறும்
பூவா னீராற் பூசுரர் போற்றும்
புத்தூரே. 2 |
2148.
|
பல்லார்
தலைசேர் மாலை சூடிப்
பாம்பும்பூண்
டெல்லா விடமும் வெண்ணீ றணிந்தோ
ரேறேறிக் |
2.
பொ-ரை: பொருந்தாத அசுரர் வாழும் மூன்று கோட்டைகளும்
வெந்து அழியுமாறு மலைவில்லால் அம்பாகப் பொருந்திய எரியாகிய
கொடிய கணையால் எய்தவனது ஊர், பூசுரர்கள் நாவினால் நாதன்
நாமங்களை நாடொறும் ஓதிப் பூவாலும் நீராலும் போற்றி வழிபடும் புத்தூர்
ஆகும்.
கு-ரை:
மேவா அசுரர்-விரும்பாத (பகைமையுடைய) திரிபுரத்தசுரர்
மேவு. எயில்-மேவிய மதில். வேவ-தீய. மலைவில்-மேருவில். ஏ-உணர்ச்சி.
கணை எனப்பின் உள்ளதால் அம்பு எனப் பொருள்படாது. எரிகணை-
அக்கினியை முனையிலுடையது. வெம்மை-தீ வெப்பம். எய்தான்-எய்த
சிவபிரான். எய்தும் திருக்கோயில் கொண்டெழுந்தருளியிருக்கும். ஊர்-
புத்தூர் என்க. நாவால் நாதன் நாமம் ஓதி நாள்தோறும் பூவால் நீரால்
பூசுரர் போற்றும் புத்தூர் என்றது ஆசிரியர் அங்கு அடைந்த காலத்தில்,
அவ்வூர்ச் சிவ வேதியர்கள் ஒரு நாளும் தவறாமல் சிவ நாமங்களை
நாவாரச் சொல்லி நீரால் ஆட்டிப் பூவால் போற்றி வழிபட்ட உண்மை
உணர்த்தியவாறு. நல்லவாறே உன்றன் நாமம் நாவில் நவின்று ஏத்த
வல்லவாறே வந்து நல்காய் (தி.1 ப.50 பா.1). உன்றன் நாமம் நாளும்
நவிற்றுகின்றேன் (ஷ4)
3.
பொ-ரை: புத்தூர்ப்புனிதர், பற்களோடு கூடிய தலைமாலையைச்
சூடிப் பாம்பையும் அணிந்து உடல் முழுதும் வெண்ணீறு அணிந்து ஒப்பற்ற
விடைமீது ஏறி இமவான் மகளாகிய பார்வதி பங்கராக இருப்பவர்.
ஆராயுமிடத்து அவர் பொல்லாதவர் அல்லர். அழகியவர்.
|