|
கல்லார்
மங்கை பங்க ரேனுங்
காணுங்கால்
பொல்லா ரல்ல ரழகியர் புத்தூர்ப்
புனிதரே. 3 |
2149. |
வரியேர்
வளையா ளரிவை யஞ்ச
வருகின்ற
கரியே ருரிவை போர்த்த கடவுள்
கருதுமூர்
அரியேர் கழனிப் பழனஞ் சூழ்ந்தங்
கழகாய
பொரியேர் புன்கு சொரிபூஞ் சோலைப்
புத்தூரே.
4 |
கு-ரை: தலைமாலையைத் தலையிற் சூடியுள்ளார்
இறைவர்.
அத்தலைகளில் பற்களின் வரிசை கெடாது இருக்கின்றன என்பார் பல்
ஆர்தலை என்றார். தலைமாலை தலைக்கணிந்து தலையாலே பலி
தேருந்தலைவன். எல்லா இடமும் வெண்ணீறு அணிந்து-மெய் யெலாம்
வெண்ணீறு சண்ணித்த மேனியன் (தி.4 ப.5 பா.1) நீற்றினை நிறையப்பூசி
(தி.4 ப.49 பா.2, தி.4 ப.64 பா.8) நீரலைத்த திருஉரு (தி.6 ப.75 பா.3) ஓர்
ஏறு ஏறிக்கல்லார் மங்கை பங்கர்-ஒப்பற்ற எருதேறியூர்ந்து அம்பிகையை
இடப்பங்கில் உடையவர். ஏறி என்னும் வினையெச்சம் பங்கர் என்னும்
வினைக்குறிப்பைக் கொண்டது. பொல்லார்-பொலி வில்லாதவர். அழகியவர்.
கல்லார் மங்கை:- கல்-இமயமலை. செழுங்கல் வேந்தன் செல்வி (தி.1 ப.53
பா.5). இமாசல குமாரி. மங்கையென்பது இத்தலத்தின் அம்பிகைக்குரிய
திருப்பெயராகிய அழகம்மை என்பதைக் குறித்ததுமாம்.
4. பொ-ரை: வரிகளும் அழகும் பொருந்திய
வளையல்களை
அணிந்த அம்பிகை அஞ்சுமாறு வந்த யானையின் தோலை உரித்துப்
போர்த்த கடவுள் கருதும் ஊர், நெல்லரிகளைக் கொண்ட வயல்கள்
சூழ்ந்து அழகிய நெற் பொரிகள் போல புன்கமரங்கள் பூக்களைச் சொரியும்
சோலைகள் சூழ்ந்த புத்தூர் ஆகும்.
கு-ரை: வரி-நிறம். ஏர்-எழுச்சி(யை
உடைய). வளையாள்-வளையலை
அணிந்த அம்பிகை. கரி-கரத்தையுடைய யானை. ஏர்-அழகு. உரிவை-தோல்.
அரி-தவளை, வண்டு, நெல்லரி எனலுமாம்.
|