பக்கம் எண் :

719

2150. என்போ டரவ மேனத் தெயிறோ
     டெழிலாமை
மின்போற் புரிநூல் விரவிப் பூண்ட
     மணிமார்பர்
அன்போ டுருகு மடியார்க் கன்ப
     ரமருமூர்
பொன்போ தலர்கோங் கோங்கு சோலைப்
     புத்தூரே.                        5
2151.
வள்ளி முலைதோய் குமரன் றாதை
     வான்றோயும்
வெள்ளி மலைபோல் விடையொன்
     றுடையான் மேவுமூர்


பழனம்-மருதநிலம். புன்கு சொரி பொரி ஏர் பூஞ்சோலை-புன்க மரங்கள்
சொரிகின்ற பொரி போன்ற அழகிய பூக்களையுடைய சோலை. சோலை
சூழ்ந்த புத்தூர்.

     5. பொ-ரை: எலும், பாம்பு, பன்றிப்பல், அழகிய ஆமை ஓடு
ஆகியவற்றை மின்னல் போன்ற பூணநூலோடு மாலையாகக் கலந்தணிந்த
அழகிய மார்பினர். அன்போடு உருகி வழிபடும் அடியவர்கட்கு அன்பர்.
அவர் எழுந்தருளிய ஊர் பொன் போல மலரும் கோங்கமலர்கள் ஓங்கிய
சோலைகளை உடைய புத்தூர் ஆகும்.

     கு-ரை: என்பு-எலும்பு. அரவம்-பாம்பு. ஏனத்து எயிறு-
பன்றிக்கொம்பு, எழில்-அழகு. மின்னைப்போலும் முப்புரி நூல். விரவி-
கலந்து. மணி-அழகிய ரத்னமாலை எனலுமாம். சிவபிரானை, அன்போடு
உருகும் அடியார்க்கு அன்பர் என்றது எல்லாருள்ளத்திலும் பதியத்தக்கது.
’தீர்ந்த அன்பாய அன்பர்க்கு அவரினும் அன்ப போற்றி’ (திருவாசகம்-
திருச்சதகம்-73). ‘நேசன் காண் நேசர்க்கு’ (தி.6 ப.65 பா.2) ‘அன்பின்
நிலையே அது’ (திருவருட்பயன். 8. 10). ‘அன்பே சிவம்’ (திருமந்திரம்).
பொன் போது-பொன்னைப் போல அலரும் பூக்கள். அலர்கோங்கு-பூக்கும்
கோங்கமரம். கோங்கு ஓங்கு சோலைகளையுடைய புத்தூர்.

     6. பொ-ரை: வள்ளி மணாளனாகிய முருகனின் தந்தையாய்
வான்தோயும் கயிலைமலை போன்ற வெள்விடையை உடையவன்