பக்கம் எண் :

720

தெள்ளி வருநீ ரரிசிற் றென்பால்
     சிறைவண்டும்
புள்ளு மலிபூம் பொய்கை சூழ்ந்த
     புத்தூரே.                          6
2152. நிலந்த ணீரோ டனல்கால் விசும்பி
     னீர்மையான்
சிலந்தி செங்கட் சோழனாகச்
     செய்தானூர்
அலந்த வடியா னற்றைக் கன்றோர்
     காசெய்திப்
புலர்ந்த காலை மாலை போற்றும்
     புத்தூரே.
                         7


எழுந்தருளிய ஊர், தெளிவாக வரும் நீரை உடைய அரிசிலாற்றின் தென்கரையில் சிறைவண்டும் பறவைகளும் நிறைந்து வாழும் அழகிய பொய்கைகள் சூழ்ந்த புத்தூர் ஆகும்.

     கு-ரை: வள்ளி முலை தோய் குமரன்:-‘குறவி தோள் மணந்த
செல்வக்குமரவேள்’ (தி.4 ப.60 பா.3). ‘வள்ளிவளைத்தோள் முதல்வன்’
(தி.6 ப.3 பா.2). ‘நம் செந்தில் மேய வள்ளி மணாளற்குத் தாதை’
(தி.6 ப.23 பா.4). வான்-விண்ணிடம். வான்றோயும் மலை. விடை-எருது.
வெண்ணிறத்தால் ஒப்புணர்த்த வெள்ளிமலை எனப்பட்டது. தெள்ளி-
தெளிந்து. தென்கரை (பா.1). ‘வண்டும் புள்ளும் மலிபூம் பொய்கை சூழ்ந்த
புத்தூர்’ (பா.6) என்று வளங்கூறிய சிறப்புணர்க.

     7. பொ-ரை: நிலம், தண்ணீர், அனல், காற்று, விசும்பு ஆகிய
ஐம்பூதங்களின் இயல்பை உடையவன். சிலந்தியைக் கோச்செங்கட்
சோழனாகப் பிறக்கச் செய்தவன். அவனது ஊர் வறுமையுற்ற புகழ்த்
துணையார் என்னும் சிவமறையவர் அன்றைக்கன்று ஒரு காசினை அருளப்
பெற்றுப் புலர்ந்த காலையிலும் மாலையிலும் போற்றி வழிபட்ட புத்தூராகும்.

     கு-ரை: நிலம், தண்(குளிர்ந்த)நீர், அனல்(-தீ), கால்(-காற்று)
விசும்பு(-ஆகாயம்) என்னும் ஐம்பெருங் காரண பூதங்களின்