2153.
|
இத்தே
ரேக விம்மலை பேர்ப்ப
னென்றேந்தும்
பத்தோர் வாயான் வரைக்கீ ழலறப்
பாதந்தான்
வைத்தா ரருள்செய் வரதன் மருவும்
மூரான
புத்தூர் காணப் புகுவார் வினைகள்
போகுமே. 8 |
இயல்பையுடையவன்.
நீர்மை-இயல்பு. சிலந்திப் பூச்சி, சிவபூஜைப் பயனாகக்
கோச்செங்கட் சோழநாயனாராகிய வரலாறு உணர்க.
அலந்த-சிவபூஜை
முட்டுப்படத் துயருற்ற, அன்றைக்கு-அன்று.
அந்நாட்கு-அந்நாள். அன்றாடம் ஒருகாசு எய்தி, பொழுது புலர்ந்த
காலையிலும் மாலையிலும் போற்றும் புத்தூர். செய்தான் ஊர் புத்தூர்
என்க. அடியான் என்றது செருவில்லிபுத்தூர் மன்னுஞ் சிவமறை
யோராகிய. . நிகரில்லா(ப்) புகழ் நீடு புகழ்த்துணையார். (பெரிய புராணம்
ஷநாயனார்.1)
8.
பொ-ரை: இந்தத் தேர் செல்லுதற்குத் தடையாக உள்ள
இந்த மலையைப் பெயர்ப்பேன் என்று கூறிச் சிவபிரான் எழுந்தருளிய
திருக்கயிலையைப் பெயர்த்து ஏந்திய பத்து வாய்களை உடைய இராவணன்
மலைக்கீழ் அகப்பட்டு அலறுமாறு தம் பாதத்தைச் சிறிது ஊன்றி அடர்த்துப்
பின் அவனுக்கு அருள் செய்யும் வரதனாகிய சிவபிரான் மருவும் ஊரான
புத்தூரைத் தரிசிக்கச் செல்வார் வினைகள் போகும்.
கு-ரை:
தேர் ஏக-தேர் தடையின்றிச் செல்லற்பொருட்டு. இம்மலை-
இக் கயிலைமலையை. பேர்ப்பன்-பெயர்த்திடுவேன். ஓர் பத்து வாயான்-
ஒரு பத்து வாயுடையவன். அக் கயிலைமலையின் கீழ், பத்து வாயாலும்
அலறினான். அதனால் இரங்கி முன் வைத்த பாதம் வாங்கியருளினான்.
வரதன்-வரத்தைக்
கொடுப்பவன். நாளும் வாளும் பெருந்தேரும்
கொடுத்தவரம் ஆங்காங்குணர்க. மருவும் ஊர் ஆனபுத்தூர்-எழுந்தருளிய
நகராகிய புத்தூர். புத்தூர் காணப் புகுவார் வினை-தலதரிசனம் செய்ய
நுழையும் அடியார்களுடைய வினைகள் (ஆகாமியம்).
|