பக்கம் எண் :

722

2154.







முள்ளார் கமலத் தயன்மான் முடியோடு
     அடிதேட
ஒள்ளா ரெரியா யுணர்தற் கரியா
     னூர்போலும்
கள்ளார் நெய்தல் கழுநீ ராம்பல்
     கமலங்கள்
புள்ளார் பொய்கைப் பூப்பல தோன்றும்
     புத்தூரே.                         9
2155.



கையார் சோறு கவர்குண் டர்களுந்
     துவருண்ட
மெய்யார் போர்வை மண்டையர் சொல்லு
     மெய்யல்ல


     9. பொ-ரை: முட்கள் பொருந்திய தண்டினை உடைய தாமரை
மலரின் மேல் உறையும் நான்முகன், திருமால் ஆகியோர் முடியோடு
அடி தேட, ஒளி பொருந்திய எரி உருவினனாய், உணர்தற்கு அரியவனாய்
விளங்கிய சிவபிரானது ஊர், தேன் பொருந்திய நெய்தல், கழு நீர், ஆம்பல்,
தாமரை ஆகியவற்றை உடைய பறவைகள் நிறைந்த பொய்கைகளில் பூக்கள்
நிறைந்து தோன்றும் புத்தூர் ஆகும்.

     கு-ரை: முள் ஆர் கமலத்து-(‘முட்டாட்டாமரை’) முட்கள் நிறைந்த
தாமரையில் வாழும். அயன்மால் முடி அடி: முறை நிரல் நிறை. ஒள்-
ஒண்மை, ஒளி, எரி-தீப்பிழம்பு, அயன்மால் உணர்தற்கு அரியான்.
உணர்தற்கே அரியவன் என்றால் ஓதற்கும் எளியன் அல்லன் என்பது
சொல்லல்வேண்டா. ‘உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்’
(பெரியபுராணம், மங்கலம்). ‘அன்பராகி மற்றருந்தவ முயல்வார்
அயனுமாலும் மற்றழலுருமெழுகாம் என்பராய் நினைவார்’ (திருவாசகம்
செத்திலாப் பத்து 4). கள்-தேன், நெய்தல், ஆம்பல், கழுநீர், கமலங்கள்.
புள்-பறவைகள். பூக்களும் புட்களும் பொருந்திய பொய்கை (-குளம்).

     10. பொ-ரை: கையில் வாங்கிச் சோற்றை உண்ணும் குண்டர்களும்,
துவர்நிறம் ஊட்டிய ஆடையை மெய்யிற் போர்த்தி மண்டையில் உணவு
வாங்கி உண்ணும் தேரர்களும் கூறும் சொற்கள் உண்மையல்லாதவை.
மெய்ம்மொழியால் அந்தணர்கள் போற்றும் புத்தூரில்