பக்கம் எண் :

723

பொய்யா மொழியா லந்தணர் போற்றும்
     புத்தூரில்
ஐயா வென்பார்க் கையுறவின்றி
     யழகாமே.                        10
2156.







நறவங் கமழ்பூங் காழி ஞான
     சம்பந்தன்
பொறிகொ ளரவம் பூண்டா னாண்ட
     புத்தூர்மேல்
செறிவண் டமிழ்செய் மாலை செப்ப
     வல்லார்கள்
அறவன் கழல்சேர்ந் தன்போ டினப
     மடைவாரே.                     11

          திருச்சிற்றம்பலம்



எழுந்தருளிய தலைவனே! என்று போற்றுவார்க்கு ஐயுறவு இன்றி அழகு
உண்டாம்.

     கு-ரை: கை ஆர் சோறு-கையில் நிறைந்த சோறு.
‘கையிலுண்ணுங்கையர்’ (தி.3 ப.53 பா.1). மெய் ஆர் போர்வை-உடம்பைப்
பொருந்தப் போர்த்த போர்வை; துவர் உண்ட போர்வை. மண்டையர்-பனங்
குடையில் உண்ணுமவர். சொல்லு-சொற்கள். மெய்யல்ல-பொய்.
பொய்யாமொழியால்-மெய்யாகிய வேதவாக்குகளால். ஐயா:- ‘வேதங்கள் ஐயா
என ஓங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே’ (திருவா. சிவபுரா. அடி. 35).
ஐயுறவு-சந்தேகம். அழகு-சிவப்பொலிவு. இம்மை மறுமைக்கான அழகுகளும்
கொள்ளலாம். சொல்+து=சோறு. சொல்-நெல். ‘சொல்லருஞ் சூற்பசும்
பாம்பின் தோற்றம்போல் மெல்லவே கரு விருந்தீன்று மேலலார் செல்வமே
போல் தலைநிறுவித் தேர்ந்த நூற் கல்விசேர் மாந்தரின் இறைஞ்சிக்
காய்த்தவே’ என்னும் (சிந்தாமணி. 53) செய்யுளில், சொல் என்றது நெல்
என்று நச்சினார்க்கினியர் எழுதிய பொருளையும் அறிக. சோறு என்பதன்
பொருள் சொல்லால் ஆனது என்பதாம்.

    11. பொ-ரை: தேன் மணம் கமழும் அழகிய காழி நகரில் தோன்றிய
ஞானசம்பந்தன், புள்ளிகளைக்கொண்ட பாம்பினைப் பூண்ட சிவபிரான்
ஆட்சிபுரியும் புத்தூர் மேல் வளமை செறிந்த தமிழால் செய்த