இம்மாலையைச் செப்ப
வல்லவர்கள் அறவடிவினனான சிவபிரான்
திருவடிகளை அடைந்து அன்பும் இன்பமும் அடைவார்கள்.
கு-ரை: நறவம்-தேன்,
மணம். பொறி-புள்ளிகள். பூண்டான்-பூண்ட
சிவபிரான். செறி-சொல்லும் பொருளும் செறிந்த. வண்தமிழ் செய்மாலை-
வளவிய தமிழாற் செய்த இப்பாமாலையை, அறவன்-அறவாழியந்தணன்
அறத்தானை அறவோனை (தி.6 ப.80 பா.7). தருமா போற்றி (தி.6 ப.5
பா.10). தயாமூலதன்மம் என்னும் தத்துவத்தின் வழி நின்று. . . நலம்
கொடுக்கும் நம்பி, தயாமூலதன்மவழி எனக்கு நல்கி (தி.6 ப.20 பா.6).
அன்போடு இன்பம்-அன்பும் இன்பும்: அன்பெனும் பாசம் வைத்தார்
(தி.4 ப.30 பா.3). அன்பலால் பொருளும் இல்லை (தி.4 ப.40 பா.6).
அன்பினில் விளைந்த ஆரமுது அன்பினால் இன்பம் ஆர்வர் இன்ப
அன்பு.
தேவாரம்
சொல்பவர், கேட்பவர், கற்பவர்
அடையும் பயன்
..............................................ஞானசம்பந்தன்
சொன்ன
இன்பாய பாடல் இவை பத்தும் வல்லார் விரும்பிக் கேட்பார்
தம்பால தீவினைகள் போயகலும் நல்வினைகள் தளரா வன்றே.
-தி.2 பதி.207 பா.11.
.........................................................ஞானசம்பந்தன்
தமிழ் பத்தும்,
யாழின்னிசை வல்லார் சொலக் கேட்டாரவர் எல்லாம்
ஊழின்மலி வினை போயிட உயர்வான் அடைவாரே.
-தி.1 பதி.11 பா.11.
|
|