பக்கம் எண் :

725

64. திருமுதுகுன்றம்

பதிக வரலாறு:

     வெங்குரு வேந்தர், செங்கண் விடையவர் திருமுதுகுன்றினைத்
தொழுது சென்று அணைந்து, ‘முதுகுன்றடைவோம்’ என்று சொன்மலர்மாலை
இசையொடும் புனைந்து ஏத்தி, அடைந்து, வலங்கொண்டு, தமிழ்ச்
சொல்லிருக்குக் குறள் மொழிந்து, திருக்கோயிலின் உள் புகுந்து,
கொன்றையார் சேவடியில் தாழ்ந்து எழுந்து, தமிழ்த் தொடைசாத்தியவற்றுள்
ஒன்று இத்திருப்பதிகம்.

பண்: காந்தாரம்

ப.தொ.எண்: 200   பதிக எண்: 64

திருச்சிற்றம்பலம்

2157.







தேவா சிறியோம் பிழையைப் பொறுப்பாய்
     பெரியோனே
ஆவா வென்றங் கடியார் தங்கட்
     கருள்செய்வாய்
ஓவா வுவரிகொள்ள வுயர்ந்தா
     யென்றேத்தி
மூவா முனிவர் வணங்குங் கோயின்
     முதுகுன்றே.                       1



     1. பொ-ரை: அழிவற்ற முனிவர்கள், தேவனே! பெரியோனே!
சிறியோமாகிய எங்கள் பிழையை பொறுத்தருளுவாயாக. அடியவர் துன்புற
நேரின், ஆ! ஆ! எனக்கூறி இரங்கி அவர்கட்கு அருள்புரிபவனே! ஒழியாது
கடல் பெருகி உலகைக் கொள்ள முற்பட்டபோது உயர்ந்தவனே! என்று
ஏத்தி வணங்கும் கோயிலை உடையது முதுகுன்றாகும்.

     கு-ரை: தேவா! பெரியோனே! சிறியோம் பிழையைப் பொறுப்பாய்!
அடியார் தங்கட்கு ஆ! ஆ! என்று அங்கு அருள் செய்வாய்! ஓவா உவரி
கொள்ள உயர்ந்தாய்! என்று ஏத்தி வணங்கும் கோயில் முதுகுன்றே என
முடிக்க. தேவா-சிவமாந்தன்மைப் பெருவாழ்வினனே. ‘அயன் திரு மால்
செல்வமும் ஒன்றோ என்னத் தேவு செய்யும், எனக் கொண்டு கூட்டி, தேவு
என்பதற்கு ஆசிரியர் மாதவச் சிவஞான