பக்கம் எண் :

726

2158.







எந்தை யிவனென் றிரவி முதலா
     விறைஞ்சுவார்
சிந்தை யுள்ளே கோயி லாகத்
     திகழ்வானை
மந்தி யேறி யினமா மலர்கள்
     பலகொண்டு
முந்தித் தொழுது வணங்குங் கோயின்
     முதுகுன்றே.                     2


யோகிகள் ‘சிவ மாந்தன்மைப் பெருவாழ்வு’ எனப் பொருள்
உரைத்தருளியதறிக. சிறியோம் என்று மூவாமுனிவர்கள் சொல்லிக்
கொள்வாராயின், அடியோம் அதனினும் இழிந்த சொல் பெற வழியில்லை.
‘நின்னையான் அகன்று ஆற்றுவனோ’ (திருக் கோவையார். 12.) என்புழி,
அதன் உரையாசிரியர் கூறிய கருத்து ஈண்டுச் சிறுமை பெருமைகட்குங்
கொள்க. ஆவா என்று:- ’ஆவா என அரக்கன் அலற அடர்த்திட்டுத்,
தேவா என அருளார் செல்வம் கொடுத்திட்டகோவே’ (தி.1 ப.89 பா.8).
’ஆவா’ என்றதன் பின், ‘என்’ எனும் பகுதியடியாத் தோன்றிய வினைச்
சொல் வருதல் உண்டு. ’ஆவா என்று எனக்கு அருளாய்’ என்ற பொருளது
கொம் பொடிந்து பிழைத்தது (திருவாசகம் போற்றித் திருவகவல், 99) ‘ஆஆ
செத்தேன்’ ( ஷ, 3: 165) என்பது போலும் இடத்தில் அவ்வினைச் சொல்
தொடர்தல் வேண்டா, ’ஆவா என்ன ஆசைப்பட்டேன்’ (திருவாசகம்-420)
‘ஆவா என்ற நீர்மையெல்லாம்’ (ஷ.442) ‘ஆவா என்றருளிச்
செடிசேருடலைச் சிதையாத்து எத்துக்கு எங்கள் சிவலோகா’ (ஷ.497)
‘ஆவா எனப்பட்டு’ (ஷ.605) ‘ஆவ என்றருளி’ (ஷ.407), ஓவா உவரி-
ஒழியாத கடல். தலவரலாறு காண்க. மூவா-மூத்தலில்லாத, (அழியாத
என்றவாறு) ‘மூவாமுதலா’ என்றதறிக. கோயில் முதுகுன்று’ என்றதால்,
மலையே சிவபிரான் என்றுணர்க; திருவண்ணாமலையே சிவபிரானாகும்
அச்சிறப்பு இத்தலத்துக்கும் உண்டு.

     2. பொ-ரை: எமக்குத் தந்தையாவான் இவனே என்று, சூரிய
பூசையை முதலிற்கொண்டு சிவபூசை செய்து வழிபடும் அடியவர்களின்
சிந்தையைக் கோயிலாகக் கொண்டு அதன் உள்ளே திகழ்பவனைக்
குரங்குகள் கூட்டமாய் மரங்களில் ஏறிப் பல மலர்களைக் கொண்டு
முற்பட்டுத் தொழுது வணங்கும் கோயிலை உடையது முதுகுன்றாகும்.