|
கறையுடை
யார்திகழ் கண்டங்
கங்கை சடையிற் கரந்தார்
பிறையுடை யார்சென்னி தன்மேற்
பெரும்புலியூர்பிரி யாரே. 7 |
2196.
|
உறவியு
மின்புறு சீரு
மோங்குதல் வீடெளி தாகித்
துறவியுங் கூட்டமுங் காட்டித்
துன்பமு மின்பமுந் தோற்றி
மறவியஞ் சிந்தனை மாற்றி
வாழவல் லார்தமக் கென்றும்
பிறவி யறுக்கும் பிரானார்
பெரும்புலி யூர்பிரி யாரே. 8 |
உடையவர் ஆகியோர்
குறைகளைத் தீர்ப்பவர். இளமைத்தன்மையர்,
அழகர். நம் செல்வராயிருப்பவர். கண்டத்தில் விடக்கறை உடையவர்.
கங்கையைச் சடையில் கரந்தவர். சென்னியின்மேல் பிறை உடையவர்.
கு-ரை:
வேதங்களுடையவரும், ஒலிக்கின்ற பாடல்களாலே அழகிய
தாமரை மலர்போலும் சிவந்த திருவடிகளை இடைவிடாது நினைப்பவர்களும்,
மனக்குறை உடையவர்களும் ஆகிய எத்திறத்தாருடைய குறைகளையும்
தீர்ப்பார். இளைஞர். சொக்கர். நம் செல்வர். நீலகண்டர். கங்கைச் சடையர்.
சந்திரசேகரர்.
8.
பொ-ரை: உறவும் இன்பமும் ஓங்குமாறு செய்து வீட்டின்பத்தை
எளிதாகத் தந்து துறவுள்ளமும் பற்றுள்ளமும் காட்டித் துன்ப இன்பங்களைத்
தந்து மறத்தலுடைய சிந்தனையை மாற்றி மறவாமையுடன் வாழவல்லார்;
பிறவியைப் போக்கும் பிரானார் பெரும்புலியூரை பிரியாதுறைகின்றார்.
கு-ரை:
உறவியும் இன்புறு சீரும் ஓங்குதல் - உறவும் இன்பம்
மிக்க சிறப்பும் உயர்தல். எளிதாகி - வீடு எளிதாகி. பற்றற்றொழிதல்
எளிதாகி. துறவியும் கூட்டமும் காட்டி - முத்தியும் பந்தமும் காட்டி.
துன்பமும் இன்பமும் தோற்றி - துக்கமும் சுகமும் ஆக்கி. மறவி
அம்சிந்தனை மாற்றி - மறத்தல் உடைய கருத்தை ஒழித்து. வாழ
வல்லவர் தமக்குப் பிறத்தல் என்றும் இல்லாமல் போக்கும் பிரானார்.
இத் திருப்பாடல் எல்லாருள்ளத்தும் என்றும் நிற்கத்தக்கது.
|