பக்கம் எண் :

757

2197.







சீருடை யாரடி யார்கள்
     சேடரொப் பார்சடை சேரும்
நீருடை யார்பொடிப் பூசு
     நினைப்புடை யார்விரி கொன்றைத்
தாருடை யார்விடை யூர்வார்
     தலைவரைந் நூற்றுப்பத் தாய
பேருடை யார்பெரு மானார்
     பெரும்புலி யூர்பிரி யாரே.           9
2198.







உரிமை யுடையடி யார்கள்
     உள்ளுற வுள்கவல் லார்கட்
கருமை யுடையன காட்டி
     யருள்செயு மாதி முதல்வர்
கருமை யுடைநெடு மாலுங்
     கடிமல ரண்ணலுங் காணாப்
பெருமை யுடைப்பெரு மானார்
     பெரும்புலி யூர்பிரி யாரே.           10


     9. பொ-ரை: புகழுடைய அடியவர்களுக்குப் பெரியோரைப்
போல்வர். சடையில் கங்கையை உடையவர். திருநீறுபூசும் நினைவுடையவர்.
விரிந்த கொன்றைமாலையைச் சூடியவர். விடையை ஊர்ந்து வருபவர்.
தலைமைத்தன்மை உடையவர். அழகிய ஆயிரம் பெயருடையவர்.
பெருமானாக விளங்குபவர். அவ்விறைவர் பெரும்புலி யூரைப் பிரியாது
உறைகின்றார்.

     கு-ரை: சீர் - கனம். உடையார் - சுவாமி. அடியார்கள்
சேடர் ஒப்பார் - அடியார்களுக்கெல்லாம் பெரியோரைப் போல்வார்.
சடைசேரும் கங்கை உடையார். திருநீறு பூசும் திருவுள்ளம் உடையார்.
விரிந்த கொன்றைமாலை அணிந்தவர். எருது ஊர்வார். எவ்வுலகிற்கும்
எவ்வுயிர்க்கும் தலைவர். ஐயாயிரம் பேர் உடையார்.

     10. பொ-ரை: உரிமையுடைய அடியவர்கட்கும், மனம் பொருந்த
நினைப்பவர்கட்கும் காண இயலாதனவற்றைக் காட்டி அருள் செய்யும்,
ஆதிக்கும் ஆதியாய முதல்வர். கரிய திருமாலும் மணமுடைய தாமரை
மலர் மேலுறையும் நான்முகனும் காணாப் பெருமை