2199.
|
பிறைவள
ரும்முடிச் சென்னிப்
பெரும்புலி யூர்ப்பெரு மானை
நறைவள ரும்பொழிற் காழி
நற்றமிழ் ஞானசம் பந்தன்
மறைவள ருந்தமிழ் மாலை
வல்லவர் தந்துயர் நீங்கி
நிறைவளர் நெஞ்சின ராகி
நீடுல கத்திருப் பாரே. 11
|
திருச்சிற்றம்பலம்
யுடைய பெருமான். அவ்விறைவர்
பெரும் புலியூரில் பிரியாது உறைகின்றார்.
கு-ரை:
உரிமை உடைய. . . முதல்வர் - திருவருள் உரிமை
உடைய அடியவர்களின் உள்ளத்தில் மிக நினைக்க வல்லவர்கட்குக்
காண்டற்கருமையுடையனவற்றைக் காட்டி அருள் செய்யும் அநாதி
முதல்வன். ஆதிமுதல்வன் என்பது ஆதிக்கும் ஆதியாய அநாதி
முதல்வரை உணர்த்திற்று. மாயோனும் மலரவனும் காணாத
தீப்பிழம்பாகிய பெருமை உடைய பெருமான்
11.
பொ-ரை: பிறைவளரும்
முடியினை உடைய சென்னிப்
பெரும்புலியூர்ப் பெருமானை, தேன் பெருகும் பொழில் சூழ்ந்தகாழிப்
பதியில் தோன்றிய நற்றமிழ் வல்ல ஞானசம்பந்தன் போற்றி அருளிய
வேதமாக வளரும் இத்தமிழ்மாலையால் பரவவல்லவர்கட்குத் துயர்
நீக்கமும் நெஞ்சு வளர் நிறையும் உளவாம். அவர்கள் நீடிய பேரின்ப
உலகில் வாழ்வார்கள்.
கு-ரை:
பிறை தளர்தலின்றி
வளர்ந்து கொண்டேயிருக்கும்
சடைமுடியைக் கொண்ட தலையையுடைய பெருமான். நறை - தேன்.
பொழில் - சோலை. நற்றமிழ் - திருப்பதிகங்கள். மறை வளரும் தமிழ்
மாலை - இத் திருப்பதிகம். வல்லவர் எழுவாய். இருப்பார் - பயனிலை.
அவர்க்குத் துயர் நீக்கமும், நெஞ்சுவளர் நிறையும் உளவாகும்.
|