1.
பொ-ரை: வானிற்
பொருந்திய திங்களும் கங்கையும் மருவிய
நீண்ட சடையை உடையவனும், தேன்பொருந்திய கொன்றை மாலையைச்
சூடியவனும், தேவர்களால் தொழப்படுபவனும், காடுகளில் பெண்மானைத்
தழுவி ஆண்மான்கள் மகிழும் கடம்பூரில் எழுந்தருளிய இயல்பினனும்
ஆகிய பெருமான் திருவடிகளைத் தொழின் வீடு எளிதாகும்.
கு-ரை:
வான் -
ஆகாயத்தில். அமர் - பொருந்திய. திங்களும்
-பிறையும். நீரும் - கங்கையும். மருவிய - கலந்த. வார் - நீண்ட. தேவர்
தொழப்படுவானை:- தொழப்படுந் தேவர் தொழப்படுவானைத்
தொழுதபின்னைத் தொழப்படுந் தேவர் தம்மால் தொழுவிக்கும் தன்
தொண்டரையே (தி.4 ப.112 பா.5). என்றவாறு, தன் அடியாரை யும் தேவர்
தொழுவர் எனின், தன் (பரமசிவ)னைத் தொழுதலில் ஐயமுண்டோ?.
கான்-காடு. பிணை-பெண் மான். கலை-ஆண்மான். கடம்பூர்-கடம்பு மரம்
உள்ளவூர்; தலவிருட்சம். கானமரும் பிணைபுல்கிக் கலைபயிலுங் கடம்பூர்.
என்றதால் கடப்பங்காடும் ஆகும்.