பக்கம் எண் :

761

2202.







இளிபடு மின்சொலி னார்க
     ளிருங்குழன் மேலிசைந் தேறத்
தெளிபடு கொள்கை கலந்த
     தீத்தொழி லார்கடம் பூரில்
ஒளிதரு வெண்பிறை சூடி
     யொண்ணுத லோடுட னாகிப்
புலியத ளாடை புனைந்தான்
     பொற்கழல் போற்றுது நாமே.          3


     3. பொ-ரை: இளி என்னும் இசை இனிமையும் சொல்லினிமையும்
உடைய மகளிர் தம் கரிய கூந்தலில் புகை படியுமாறு அந்தணர் ஆகுதி
வேட்கும் கடம்பூரில் ஒளிபொருந்திய வெண்பிறைசூடி உமையம்மையோடு
உடனாய்ப் புலித்தோலுடுத்து எழுந்தருளியுள்ள இறைவனின் பொற்கழலை
நாம் போற்றுவோம்.

     கு-ரை: இளி - (யாழின் நரம்புகளுள் ஒன்று.) ஏழிசையுள் ஒன்று.
சொல்லினிமையும் இளி என்னும் இசையினிமையும் வேறுபடாது இருக்கும்
என்றபடி. (சொல்லினிமைக்கு ஒவ்வாது இளியும் படும் எனலும் ஆம்).
குழல் - கூந்தல். குழல்மேல் புகை இசைந்து ஏறத்தீத்தொழில் ஆர்கடம்பூர்
எனலுமாம். ஏற என்னும் வினையெச்சம். ஆர் என்னும் வினைப்பகுதியொடு
முடிந்தது. கலந்த என்பதனொடு முடித்தலும் கூடும். ஏறக் கொள் (ளும்)
கை எனல் வலிந்து பொருள் கொள்வதாகும். ஏறத் தெளி(த்தல்) என்று
பொருத்தலுங்கூடும். யாகத்தில் இருபத்தேழு நட்சத்திரப் பெண்டிர்க்கும்
தீவழி உதவும் வேதவுண்மை குறிக்கப்பட்டது. தெளிபடு கொள்கை -
தெளிவு பொருந்திய கோட்பாடு; வேதக்கொள்கை. தீத்தொழில் - வேள்வி.
ஆர் - பொருந்திய தீத்தொழிலார் - வேள்வியாளர் எனலுமாம். ஒளி
தருபிறை - வெண்பிறை. ஒள் நுதல் - ஒளியதாகிய நெற்றியை உடைய
உமாதேவியார். பண்புத்தொகை நிலைக்களத்துப்பிறந்த அன் மொழித்
தொகை. ‘பண்பு தொகவரூஉம் கிளவியானும். . . ஈற்று நின்றியலும்
அன்மொழித் தொகையே’ (தொல், சொல், 902). ‘பண்புத்தொகை
படவும். . . அச்சொற் றொக்கபின் அத்தொகை அன்மொழித்
தொகையாகாமையின், தொகுவதன்முன் அவற்றிற்கு நிலைக்களமாகிய
சொற்பற்றிவரும்’ (பிரயோக விவேகம்:-24. உரை). ‘ஓடு’ உடன் இரண்டனுள்
ஒன்று மூன்றனுருபின் நீட்சி. (தொல்காப்பியர் ‘ஓடு’ என்றே கூறினார்)
மற்றொன்று உடனாதல் (ஒருசேர இருத்தல்) குறித்தது. ‘எங்கேனும் இருந்து
உன் அடியேன் உனை நினைந்தால் அங்கே வந்து