பக்கம் எண் :

762

2203.







பறையொடு சங்க மியம்பப்
     பல்கொடி சேர்நெடு மாடம்
கறையுடை வேல்வரிக் கண்ணார்
     கலையொலி சேர்கடம் பூரில்
மறையொலி கூடிய பாடன்
     மருவிநின் றாடன் மகிழும்
பிறையுடை வார்சடை யானைப்
     பேணவல் லார்பெரி யோரே.         4


என்னொடும் உடனாகி நின்றருளி’ (தி.7 பா.230) என்புழிக் காண்க.
ஓடுடன் கூடி என்றலும் உண்டு. சூடிஉடனாகிப் புனைந்தான் என்றியைக்க.
புலி அதள் ஆடை - புலித்தோலுடையை. புனைந்தான் -அணிந்த
சிவபிரான். பொன் கழல் - பொன் போலுஞ் சேவடி. கழல் -ஆகுபெயர்.
நாம் கழலைப் போற்றுதும் ( - போற்றுவோம்). ‘கள்’ வண்டு என்பாரு
முளர். இதன் பொருளமைதி புலப்பட்டிலது.

     4. பொ-ரை: பறை சங்கம் முதலிய ஒலிக்கப் பலவகையான
கொடிகள் கட்டிய மாடவீடுகளில் மகளிர் ஆடும் ஒலி நிறைந்த கடம்பூரில்
வேதஒலியோடு கூடிய பாடல்கள் பாடி ஆடி மகிழும் பிறைசூடிய நீண்ட
சடையை உடைய பெருமானைப் பேண வல்லவர் பெரியோர் ஆவர்.

     கு-ரை: பறை - வாத்தியம். சங்கம் - சங்குகள். இயம்ப - ஒலிக்க.
கறை - குருதிக் கறை. கறுப்பு. வேல். பிறருடம்பிற்பட்டு, இரத்தம் தோய்ந்து
உலர்ந்து கறுப்புறுதல் கூறப்பட்டது. சாதியடை, கண்ணுக்குச் செவ்வேல்,
அதன் கொடுமையும் கூர்மையும் செம்மையும் பற்றி ஒப்பாகும். கலை -
மேகலை; மாடங்களில் மகளிர் ஆடுதலால் உண்டாகும் ஒலி. மறை ஒலி -
வேத முழக்கம். பாடல் - வேதகீதம்; ஆடல் மகிழும் சடையான். வார் -
நீண்ட.

     பேணவல்லார் - விரும்பி வழிபடவல்லார:- பெரியோர் - திருவருட்
பெருமையுடையோர். பேணவல்லார்:- ‘வித்தும் அதன் அங்குரமும்
போன்றிருக்கும் மெய்ஞ்ஞானம், வித்தும் அதன் அங்குரமும் மெய்
உணரில் - வித்ததனிற் காணாமையால், அதனைக் கைவிடுவர்.
கண்டவர்கள், பேணாமையால் அற்றார் பேறு’. (திருக்களிற்றுப்படியார். 57).
என்னும் உண்மைநூலின்கண் பேணாமையாலாம். பெறாமை கூறுமுகத்தான்
பேண வல்லார் பெருமை உணர்த்தப்பட்டமை விளங்கும்.