2204.
|
தீவிரி
யக்கழ லார்ப்பச்
சேயெரி கொண்டிடு காட்டில்
நாவிரி கூந்தனற் பேய்கள்
நகைசெய்ய நட்ட நவின்றோன்
காவிரி கொன்றை கலந்த
கண்ணுத லான்கடம் பூரில்
பாவிரி பாடல் பயில்வார்
பழியொடு பாவ மிலாரே.
5 |
2205.
|
தண்புன
னீள்வய றோறுந்
தாமரை மேலனம் வைகக்
கண்புணர் காவில்வண் டேறக்
கள்ளவி ழுங்கடம் பூரில்
|
5. பொ-ரை:
தீப்போலும் சடைவிரியக் கழல்கள் ஆர்க்கக்
கையில் அனல் ஏந்திச் சுடுகாட்டில் பேய்க்கணம் நகைக்க நடனம்
ஆடுபவனும் கொன்றை மாலை அணிந்த நுதல்விழியானும் ஆகிய
சிவபெருமானது கடம்பூரை அடைந்து ஓசையின்பம் உடைய பாடல்களைப்
பாடிப் போற்றுவார் பழிபாவங்கள் இலராவர்.
கு-ரை: தீவிரியக் கழல் ஆர்ப்பச்
சேய் எரி கொண்டு இடுகாட்டில்
நட்டம் நவின்றோன் - தீப்போலும் சடை விரியவும் கழல் ஒலிக்கவும்
செந்தீயைக் கையில் கொண்டு, உலகனைத்தும் கற்பொடியென அழியுஞ்
சருவசங்காரகாலத்தில், அகண்டாகாரப் பெருவெளியில், தான் தனியனாகி
இலங்கித், திருநடம் பயிலுஞ் சிவபெருமான், நாவிரிகூந்தல் நல்பேய்கள்
நகைசெய்ய - நீட்டிய நாக்கையும் பரந்த கூந்தலையும் உடைய நல்ல
பேய்கள் நகுதலைச் செய்ய (நட்டம் நவின்றோன்). காவிரி கொன்றை -
சோலைகளில் மலர்ந்த கொன்றை மலர்கள். கண்ணுதலான் -
நெற்றிக்கண்ணன். பாவிரிபாடல் - ஓசை (யின்பம்) பெருகிய பாட்டு.
பா - பரந்து செல்வதோரோசை. (தொல்). பயில்வார் - பயிற்சிசெய்வார்.
பழியொடு பாவம் இலார் - (புகழும் புண்ணியமும் உள்ளவராய்ப்) பழியும்
பாவமும் இல்லாதவராவர்.
6. பொ-ரை:
குளிர்ந்த நீர்நிறைந்த வயல்களில் முளைத்த
தாமரைகள் தோறும் அன்னங்கள் வைகிமகிழவும், கண்கவரும்
|