|
பெண்புனை
கூறுடை யானைப்
பின்னு சடைப்பெரு மானைப்
பண்புனை பாடல் பயில்வார்
பாவமி
லாதவர் தாமே. 6
|
2206.
|
பலிகெழு
செம்மலர் சாரப்
பாடலொ டாட லறாத
கலிகெழு வீதி கலந்த
கார்வயல் சூழ்கடம் பூரில்
ஒலிதிகழ் கங்கை கரந்தா
னொண்ணுத லாளுமை கேள்வன்
புலியத ளாடையி னான்றன்
புனைகழல் போற்றல் பொருளே.
7 |
சோலைகளில் வண்டுகள்
மொய்க்க மலர்கள் தேன்பிலிற்றவும்
அமைந்த கடம்பூரில் மாதொருபாகனாய்ப் பின்னிய சடையினனாய்
விளங்கும் பெருமானைப் பண்ணமைந்த பாடல்கள் பாடிப்பரவுவார்
பாவம் இல்லாதவராவர்.
கு-ரை: தண்புனல் - குளிர்ந்ததாகிய
நீர். அனம் - அன்னப்புள்.
கண்புணர்கா - கண்கள் தாமே சென்று புணர்தற்குத் தக்க அழகுமிக்க
சோலை. கள் - தேன். அவிழும் - அலரும். வண்டுகள் ஏறுதலால் மலர்கள்
தேன்நெகிழ அலரும் என்றபடி, பெண்புனை கூறு உடையான் - மாதியலும்
பாதியன் அர்த்தநாரீச்சுவரன். பின்னுசடை - பின்னிய சடை. பண்புனை
பாடல் - பண்களால் அழகு செய்யப்பெற்ற பாடல்கள். பண்ணின் பயனாம்
நல்லிசை (பெரிய. சண்டேசுர. 9). கலந்த பாடல் என்றவாறு. பாவம்
இலாதவர் - என்றதற்கு மேற்பாட்டில் உரைத்தாங்கு உரைத்துக்கொள்க.
7. பொ-ரை:
சிவபூசகர்கள் பூசைக்கு வேண்டு செம்மையான
மலர்களைக் கொய்து, பாடியும் ஆடியும் மகிழும் ஒலிநிறைந்த
வீதிகளையும் நீர் நிரம்பிய வயல்களையும் உடைய கடம்பூரில் கங்கையை
முடியில் மறைத்தவனாய், உமைபாகனாய், புலித்தோல் உடுத்தவனாய்
விளங்கும் பெருமான் புகழைப் போற்றுதலே பொருள்உடைய செயலாகும்.
|