2207.
|
பூம்படு
கிற்கயல் பாயப்
புள்ளிரி யப்புறங் காட்டில்
காம்படு தோளியர் நாளுங்
கண்கவ ருங்கடம் பூரில்
மேம்படு தேவியொர் பாக
மேவியெம் மானென வாழ்த்தித்
தேம்படு மாமலர் தூவித்
திசைதொழத் தீய கெடுமே, 8 |
கு-ரை:
பலி - பூஜை. (சேது புராணம்). செம்மலர் - செய்ய பூக்கள்.
பலிகெழுமலர் - பூஜைக்குப் பொருந்திய பூக்கள். சார அடைய. பாடலொடு
ஆடல் - பாட்டும் ஆட்டும். அறாத - நீங்காத. கலி - ஒலி. கடம்பூர்
வீதியிலுள்ளார் சிவபூஜைக்குப் பொருந்திய பூக்கள் கொண்டுவந்து பூசித்துப்
பாடுதலும் ஆடுதலும் செய்வர் என்றவாறு, செம்மலர் என்பதற்குப்
பெருமையிற் சிறந்தோர் எனலுமாம். பாடலாடலறாத கலிகெழு வீதி
கலந்தகடம்பூர் வயல்சூழ்கடம்பூர். செம்மல்லர் என்று பொருள் கொள்ளின்.
பலி என்பது (அம்மல்லரது மெய்வலிமை குறிக்க) மாமிசம் என்றாகும். புலி
அதள் ஆடை:- (பார்க்க: பா.3) புனை - அழகுறுத்தப்பட்ட. கழல் -
கழலணிந்த திருவடிகளை. போற்றல் - துதித்தல், பொருள் - உடம்பின்
பயன். போற்றாமை - உடம்பெடுத்ததன் பயனின்மை என்றவாறு. பிறவிப்
பயன் ஆகமங்களை உணர்ந்து, சிவபிரான் திருவடி மலர்களை
எப்பொழுதும் இடைவிடாமல் போற்றுதலேயன்றிப் பிறிதில்லை. எப்போதும்
இனியானை என்மனத்தே வைத்தேனே.
8.
பொ-ரை: அழகிய நீர் நிலைகளில் கயல்கள் பாய, அதனால்
பறவை இரிந்தோட விளங்கும் கடம்பூரில் மூங்கில் போன்ற தோள்களை
உடைய மகளிர் மனங்கவரும் இயல்பினனாய் விளங்குவோனும் புறங்காட்டில்
ஆடுபவனுமாகிய பெருமானது கடம்பூரை அடைந்து மாதொருபாகனே!
எம்மானே! எனக்கூறி மலர்தூவித் தொழத் தீயனகெடும.்
கு-ரை:
படுகு - படுகர், நீர்நிலை. வண்டு - வண்டர். சிறகு - சிறகர்,
சுரும்பு - சுரும்பர் எனவருதல் போல்வது இது. பூம்படுகரில் கயல்மீன்கள்
பாயவும் புட் (பறவை)கள் இரிய (ஓட)வும் புறங்காட்டில் தோளியர்
கண்கவரும் என்க. காம்பு அடுதோள் - மூங்கிலை நீ எனக்கு ஒப்பாகாய்
என்று கொல்லும் தோள். அடுதல் - கொல்லுதல். கண்களை
|