2208.
|
திருமரு
மார்பி லவனுந்
திகழ்தரு மாமல ரோனும்
இருவரு மாயறி வொண்ணா
வெரியுரு வாகிய வீசன்
கருவரை காலி லடர்த்த
கண்ணுத லான்கடம் பூரில்
மருவிய பாடல் பயில்வார்
வானுல கம்பெறு வாரே. 9 |
ஒவ்வாது தோற்றோடிக்
கயல் படுகரிற்பாய்தலும் புள் (வண்டு) இரிதலும்
கூறப்பட்டன. கயலஞ்சப் பிறழ்கண்ணாள் (கம்பர். மிதிலைக். 26)
புள்ளுறைகமலவாவிப் பொருகயல் வெருவியோட வள்ளுறை கழிந்த
வாள்போல் வரியுற வயங்கு கண்ணாள் (ஷ உண்டாட்டு 20). நறைபாய்
வனமலர்வாய் அளிபடரச் சேல்பாய்வனகயல் பாய்வன செங்கால்
மடவன்னம், போல்வாய் புனல்மடவார் படிநெடுநாடு (ஷ.கங்கைப்.8).
இதன் பொருளமைதி புலப்பட்டிலது.
9.
பொ-ரை: திருமகள் மருவிய மார்பினனாகிய திருமாலும்,
தாமரை மலர்மேல் விளங்கும் நான்முகனும் ஆகிய இருவரும் அறிய
முடியாதவாறு எரியுருவான ஈசனும் கரியமலைபோன்ற இராவணனைக்
காலால் அடர்த்தவனும் ஆகிய பெருமானது கடம்பூரை அடைந்து,
பொருந்திய பாடல்களைப் பாடிப்போற்றுவார் வானுலகம் பெறுவர்.
கு-ரை:
திருமார்பிலவனும் - திருமகள் மருவிய மார்பினையுடைய
திருமாலும், திருமறுமார்பன் என்பது வேறு. அதில் ஸ்ரீவத்ஸம் என்பது
திருமறு எனப்பட்டது. மாமலரோன் - செந்தாமரை மலரில் வாழ்கின்ற
பிரமன். ஆகிய இருவரும் என்று ஒரு சொல் வருவிக்க. அறிவொண்ணா -
அறிதற்கு ஒன்றாத. எரி உரு - தீப்பிழம்பு வடிவம். கருவரை - கரிய
மலை போலும் இராவணனை. காலில் அடர்த்த கயிலையை எடுத்தபோது
திருவடிப் பெருவிரலூன்றி நெருக்கிய. காலனைக்காலாற் கடிந்த
கண்ணுதலான் எனலுமாம்.
பிற திருப்பதிகங்களுள்,
ஒன்பதாவது பாட்டில், அடிமுடி
தேடிய வரலாற்றையொட்டி இராவணன் கயிலை யெடுத்த வரலாற்றைக்
கூறக்காணோம். சில பதிகங்களுள் இரண்டுங்கூறப்
|