2209.
|
ஆடை
தவிர்த்தறங் காட்டு
மவர்களு மந்துவ ராடைச்
சோடைக ணன்னெறி சொல்லார்
சொல்லினுஞ்
சொல்லல கண்டீர்
வேடம் பலபல காட்டும்
விகிர்தனம்
வேத முதல்வன்
காடதனினட மாடுங்
கண்ணுத லான்கடம்
பூரே.
10 |
2210.
|
விடைநவி
லுங்கொடி யானை
வெண்கொடி சேர்நெடு
மாடம்
கடைநவி லுங்கடம் பூரிற்
காதல னைக்கடற்
காழி |
பட்டில ஆயினும், இவ்வாறு
வரலாற்றை முன்பின் ஆகக் கூறவில்லை.
10. பொ-ரை:
ஆடையின்றி அறங்கூறும் அமணர்களும், துவராடை
உடுத்து அறநெறிபோதிக்கும் பதர்களாகிய புத்தர்களும் நன்னெறிகூறிச்
சொன்னாலும் அவை மெய்ச்சொற்களல்ல. பல்வேறு வடிவங்களைக்
கொண்டருளும் சிவபிரானும், நம் வேதமுதல்வனும் சுடுகாட்டுள் நடனமாடும்
கண்ணுதலோனுமாகிய பெருமான் எழுந்தருளியிருப்பது கடம்பூராகும்.
கு-ரை: ஆடை தவிர்த்து அறம்காட்டுமபவர்களும்
- ஆடை
உடுக்காமல் தர்மோபதேசம் செய்யும் அமணர்களும். அம்துவர்
ஆடைச்சோடைகள்:- சிவப்பு ஊட்டிய உடைகளைத் தரித்த வறட்சியர்
(பொருளில்லாத பேச்சுடையார் என்றவாறு). நல்நெறி - நல்லவழி
(ஞானமார்க்கம்). சொல்லினும் சொல் அல - சொல்லினாலும் அவை
மெய்ச்சொற்கள் அல்ல. வேடம் பலபல காட்டும் விகிர்தன்:- பல
வேடமாகும் பரன் நம் வேத முதல்வன். காடதனில் - காட்டில். கள்ளி
முதுகாட்டில் ஆடிகண்டாய் (தி.6 ப.23. பா.4).
11. பொ-ரை:
விடைச்சின்னத்தை அறிவிக்கும் கொடியை
உடையவனை, வெண்கொடிகள் சேர்ந்த உயரிய வாயில்களைக் கொண்ட
மாடவீடுகளை உடைய கடம்பூரில் விருப்புடையவனை, கடலை அடுத்துள்ள
காழிமாநகரில் தோன்றிய நன்னடை உடைய
|