பக்கம் எண் :

768

 

நடைநவின் ஞானசம் பந்தன்
     நன்மையா லேத்திய பத்தும்
படைநவில் பாடல் பயில்வார்
பழியொடு பாவ மிலாரே.                11


                    திருச்சிற்றம்பலம்

ஞானசம்பந்தன் நன்மை அருளுமாறு வேண்டிப்பாடிய சாதனமாகிய பாடல்களை ஓதுவார் பழிபாவம் இலாராவர்.

     கு-ரை: விடை நவிலும் கொடியானை - எருது பயின்ற கொடியை
உடையவனை. வெண்கொடி - வெள்ளைத் துணிக்கொடி. கடை - வாயில்,
இடமும், அங்காடியுமாம். காதலன் - உயிர்கட்கு அருட்காதல் விளைப்பவன்,
அன்புருவானவன் எனலுமாம். ‘அன்பே சிவம்’. நடை -ஞானாசாரம்.
நன்மை - மங்களம். படைநவில் பாடல் -திருவருட்சாதனமாக நவின்ற
பாடல்கள். படை - சாதனம். அல்லற்பட்டு. . .செல்வத்தைத் தேய்க்கும்
படை (குறள்.555). படை -நிவேதனமுமாம். இறைவன் புகழொடு படுக்கும்
பாடல் என்றார் கோவை சிவக்கவிமணி முதலியாரவர்கள். பழியொடுபாவம்
இலர் (பா.5இல்) உரைத்தாங்கு உரைத்துக்கொள்க.

திருஞானசம்பந்தர் புராணம்

சீர்வளர் கோயிலை அணைந்து தேமலர்க்
கார்வளர் கண்டர்தாள் பணிந்து காண்பவர்
பார்புகழ் பதிகங்கள் பாடி நீடுவார்
வார்பொழிற் கடம்பையும் வணங்கி வாழ்ந்தனர்.

                            -சேக்கிழார்.