69.
திருப்பாண்டிக்கொடுமுடி
|
பதிக வரலாறு:
திருஞானசம்பந்தமூர்த்தி
நாயனார் திருக்கொடிமாடச் செங்குன்றூரில்
தங்கி வழிபட்ட காலத்தில், அக்கொங்கு நாட்டில், பயின்றதனால்
பனித்தகுளிர் முன்னான பிணி வந்து மூள்வது போல் முடுகுதலும்
பரிசனங்கள் அதை அவர்க்கு அறிவித்து இறைஞ்சினர்.
திருவருளைத்தொழுது, திருநீலகண்டத்தின் தியானவுறைப்பால்
அக்குளிர்நோய் அடியாரை வருத்தாமல், அவ்வினைக்கு இவ்வினை ஆம்
எனத் தொடங்குந் திருப்பதிகம் பாடியருளித்தடுத்தார். அந்நாட்டினர்
எல்லோர்க்கும் அந்நோய் பற்றாது நீங்கிற்று. பின் பல தலங்களைப்
பணிந்து சென்று, திருப்பாண்டிக் கொடுமுடியை அடைந்து வழிபட்டுப் பாடி
மகிழ்ந்து சாத்தியது இவ்வளத்தமிழ்மாலை.
பண்:
காந்தாரம்
ப.தொ.எண்:
205 |
|
பதிக
எண்: 69 |
திருச்சிற்றம்பலம்
2211.
|
பெண்ணமர்
மேனியி னாரும்
பிறைபுல்கு செஞ்சடை யாருங்
கண்ணமர் நெற்றியி னாருங்
காதம ருங்குழை யாரும்
எண்ணம ருங்குணத் தாரு
மிமையவ ரேத்தநின் றாரும்
பண்ணமர் பாடலி னாரும்
பாண்டிக் கொடுமுடி யாரே. 1 |
1. பொ-ரை:
பாண்டிக்கொடுமுடி
இறைவர் மாதொரு கூறர்.
பிறைசூடிய சடையார். கண் பொலிந்த நெற்றியர். காதில் குழை அணிந்தவர்.
எண்குணத்தவர். இமையவர் போற்ற நிற்பவர். இசையமைதியோடு கூடிய
பாடல்களைப் பாடுபவர்.
கு-ரை: பெண்
அமர் மேனியினார்-அர்த்தநாரீச்சுவரர். பிறை புல்கு
செஞ்சடையார்-சந்திரசேகரர். கண்ணமர் நெற்றியினார்-பால
|