2212.
|
தனைக்கணி
மாமலர் கொண்டு
தாள்தொழு வாரவர் தங்கள்
வினைப்பகை யாயின தீர்க்கும்
விண்ணவர் விஞ்சையர் நெஞ்சில்
நினைத்தெழு வார்துயர் தீர்ப்பார்
நிரைவளை மங்கை நடுங்கப்
பனைக்கைப் பகட்டுரி போர்த்தார்
பாண்டிக் கொடுமுடி யாரே.
2 |
நேத்திரர். காது
அமரும் குழையார் - குழைக்காதனார். எண் அமரும்
குணத்தார் - எண் குணத்தார். இமையவர் ஏத்த நின்றார் - தேவர்
தொழப்படுவார். பண் அமர் பாடலினார்:- பண்ணின் இசையாகி நின்றாய்
போற்றி (தி.6 ப.5 பா.57) பண்துளங்கப் பாடல் பயின் றாய் போற்றி
(தி.6 ப.5 பா.7). பண்ணினார் பாடலாகிப் பழத்தினில் இரதமாகி. . .
அனைத்தும் ஆகி (தி.4 ப.70 பா.4). இத்தலத்தின் தேவியார் திருநாமம்.
பண்மொழியம்மை. வேதமே பண்ணு ளார் என (தி.2 ப.28 பா.3). முற்
போந்ததும் ஈண்டறியத்தக்கது.
2. பொ-ரை:
பாண்டிக்கொடுமுடி இறைவர், தம்மைக் கொன்றை
மலர் கொண்டு பூசித்து வணங்குபவர்களின் பகையாய்த்துயர் செய்யும்
வினைகளைத் தீர்த்தருளும் மேலானவர். ஞானவடிவினர். நெஞ்சில்
நினைத்து வணங்க எழும் அன்பர்களின் துயரங்களைத் தீர்ப்பவர்.
உமையம்மை அஞ்சப் பனை போன்ற கையை உடைய யானையை
உரித்துப் போர்த்தவர்.
கு-ரை:
கணி - கொன்றை. விண்ணவர் - சிவபெருமான்.
தன்னைக் கொன்றையின் சிறந்த அழகிய மலர்கொண்டு திருவடிப் பூஜை
புரிவார்களுடைய வினையாகிய (வீட்டுப்) பகையைத் தீர்க்கும் விண்ணவன்
என்றவாறு. விண்ணவர் என்றதற்கு ஏற்பத் தமை என்று இருத்தல்
வேண்டுமாயினும், ஒருமைக்கும் பன்மைக்கும் உரிய கடவுளைக்கூறலின்
குற்றமாகாது. கொன்றைசூடி நின்ற தேவை அன்றி ஒன்றும் நன்று இலோம்
என்ற ஆசிரியர், நமக்கும் அதையே உபதேசித்தருள்வதுணர்க. விஞ்சையர் -
நெஞ்சில் நினைத்து எழுவார் துயர்தீர்ப்பார். விஞ்சையர் - வித்தியாதரர்.
சிவபெருமானைக் குறித்ததாகக்கொண்டு ஞான சொரூபர் எனலும் ஆம்.
விஞ்சை -வித்தை, ஞானம். நிரைவளை மங்கை - வரிசையுற்ற வளையல்
அணிந்த உமாதேவியார். பனை கை பகடு - பனை போலும் துதிக்கையை
உடைய யானை. உரி - தோல்.
|