2215.
|
போகமு
மின்பமு மாகிப்
போற்றியென் பாரவர் தங்கள்
ஆகமு றைவிட மாக
வமர்ந்தவர்
கொன்றையி னோடும்
நாகமுந் திங்களுஞ் சூடி
நன்னுதன் மங்கைதன்
மேனிப்
பாகமு கந்தவர் தாமும்
பாண்டிக் கொடுமுடி
யாரே.
5 |
2216.
|
கடிபடு
கூவிள மத்தங்
கமழ்சடை மேலுடை யாரும்
பொடிபட முப்புரஞ் செற்ற
பொருசிலை யொன்றுடை யாரும் |
கு-ரை:
நறை - தேன். ஞாலம் - பூமி. கறை - நச்சுக்கறுப்பு. மா -
கரிய; அழகுமாம். மிடற்றார் - கண்டத்தையுடையவர். அரங்கு ஆ -
நாடகசபையாக. கனல் - தீ. மறைவளர் பாடல் - வேதப்பாடல். மண்
முழவம் - மார்ச்சனையையுடைய முழா. குழல் - வேய்ங்குழல். மொந்தை -
ஒரு கட்பறை. பறை-வாத்தியம். சொல் எனலுமாம்.
5.
பொ-ரை:
பாண்டிக்கொடுமுடி இறைவர், போகமும் அதனால்
எய்தும் இன்பமும் ஆனவர். போற்றி என்று கூறுவார் உடலை
உறைவிடமாகக்கொண்டு அமர்பவர். கொன்றை, பாம்பு, திங்கள் ஆகியன
வற்றை முடியில் சூடி உமைபாகம் உகந்தவர்.
கு-ரை:
போகமும் இன்பமும் ஆகி - பெத்தத்தில், தநுகரண
புவனங்களொடு சேர்த்து நான்காவதாக எண்ணப்படும். போகமும்,
அப்போகாநுபவம் பற்றி உயிர்க்கு எய்தும் சிற்றின்பமும், முத்தியில்
சிவபோகமாம் சிவாநந்தமும் ஆகி. ஆகம்-சுத்தியால் ஓங்கிய தேகம்.
உறைவு இடம் - வாழ்தலையுடைய இடம், கோயில். ஊன் உடம்பு ஆலயம்
(திருமந்திரம்). ஓங்குடலம் திருக்கோயில் (ஞான பூஜா விதி.9). நாகம்
-
பாம்பு. நல்நுதல் மங்கை - அழகிய நெற்றியையுடைய உமாதேவியார்.
மேனிப்பாகம் - திருமேனியிற் பாதி. உகந்தவர் -விரும்பியவர்.
6.
பொ-ரை:
பாண்டிக்கொடுமுடி இறைவர், மணம் பொருந்திய
வில்வம், ஊமத்தை ஆகியவற்றைச் சடையின்மேல் உடையவர். முப்
|