பக்கம் எண் :

773

வடிவுடை மங்கைதன் னோடு
     மணம்படு கொள்கையி னாரும்
படிபடு கோலத்தி னாரும்
     பாண்டிக் கொடுமுடி யாரே.           6
2217.







ஊனமர் வெண்டலை யேந்தி
     யுண்பலிக் கென்றுழல் வாரும்
தேனம ரும்மொழி மாது
     சேர்திரு மேனியி னாரும்
கானமர் மஞ்ஞைக ளாலுங்
     காவிரிக் கோலக் கரைமேல்
பானல நீறணி வாரும்
     பாண்டிக் கொடுமுடி யாரே.           7


புரங்களைப் பொடிபடுமாறு செய்த வில்லினை உடையவர். அழகிய
பார்வதி தேவியாரை மணம் புரிந்தவர். உலக உயிர்கள் வடிவம்
கொள்ளுதற்கு முன்படிவமாக விளங்குபவர்.

    கு-ரை: கடி - மணம். கூவிளம் - வில்வம். மத்தம் - ஊமத்தை.
கமழ் - மணக்கின்ற. செற்ற - அழித்த. பொருசிலை - போர்வில்.
‘வடிவுடைமங்கை’. படிபடுகோலத்தினார் - படியாகப் பொருந்திய கோலம்.
எல்லாவுருவங்களுக்கும் காரணவுருவம் இறைவனுடையதே. ‘யாதேனும்
காரணத்தால் எவ்வுலகில் எத்திறமும் மாதேயும் பாகம் இலச்சினையே
ஆதலினால்’, (திருக்களிறு. 82). காரியமான எல்லாப் படிக்கும் இறைவனது
கோலமே காரணப் படியாயிற்று. படி - ஒப்பு; பிரதிச்சந்தம்.

    7. பொ-ரை: பாண்டிக்கொடுமுடி இறைவர், ஊன் பொருந்திய
வெண்தலையை ஏந்திப் பலியேற்கத் திரிபவர். தேன்மொழி மாதாகிய
பார்வதியம்மை சேர்ந்த திருமேனியர். காடுகளில் வாழும் மயில்கள் ஆடும்
காவிரியின் அழகிய கரைமேல் பால் போன்ற திருநீறு அணிந்து திகழ்பவர்.

    கு-ரை: ஊன் - மாமிசம். தலை - பிரமகபாலம். பலி - பிச்சை.
உழல்வார் - திரிவார். தேன் அமரும் மொழிமாது:- ‘பண்மொழியம்மை’
இத்தலத்துத் தேவியின் திருநாமம். தேன். . . திருமேனியினார்-