பக்கம் எண் :

774

2218.







புரந்தரன் றன்னொடு வானோர்
     போற்றியென் றேத்தநின் றாரும்
பெருந்திறல் வாளரக் கன்னைப்
     பேரிடர் செய்துகந் தாரும்
கருந்திரை மாமிடற் றாருங்
     காரகில் பன்மணி யுந்திப்
பரந்திழி காவிரிப் பாங்கர்ப்
     பாண்டிக் கொடுமுடி யாரே.           8
2219.



திருமகள் காதலி னானுந்
     திகழ்தரு மாமலர் மேலைப்
பெருமக னும்மவர் காணாப்
     பேரழ லாகிய பெம்மான்


அர்த்தநாரீச்சுர வடிவுடையவர். கான் - காடு. மஞ்ஞைகள் - மயில்கள்.
கோலம் - அழகு. பால் நலம் நீறு - பால்போலும் நன்மைகளையுடைய நீறு.

     8. பொ-ரை: பாண்டிக்கொடுமுடி இறைவர், இந்திரனோடு ஏனைய
தேவர் பலரும் போற்றி என்று ஏத்த நிற்பவர். மிக்க வலிமையை உடைய
இராவணனை முதலில் அடர்த்துப் பின் அருள் செய்தவர். கரிய கடலில்
தோன்றிய நஞ்சினை உண்டு நிறுத்திய கண்டத்தினர். கரிய அகில்,
பல்வகைமணிகள் ஆகியவற்றை அடித்துக்கொண்டு பரந்து கிழிந்து வரும்
காவிரியின் அருகில் உறைபவர்.

     கு-ரை: புரந்தரன் - இந்திரன். வானோர் - தேவர். இந்திரனோடு
தேவர்கள் சிவபிரானைப் போற்றி - போற்றி என்று ஏத்தும் முதன்மை
உணர்த்தப்பட்டது. பெருந்திறல் - மிக்க வலிமை. வாள் - கொடுமை.
வாளை ஏந்திய அரக்கன் ( - இராவணன்) எனலுமாம். பேர் இடர் -
மலையைப் பேர்க்கும் துன்பம், பெரிய துன்பம், கருந்திரை - கரிய கடல்
நஞ்சு, திரை என்பது கடலுக்குச் சினையாகு பெயர். கடல் என்பது நஞ்சுக்கு
இடவாகு பெயர். திரை இருமடியாகு பெயர். மா -கரிய, அழகிய. மிடற்றார் -
கண்டத்தினார். கார் அகில் - கரிய அகில்மரத் தினையும். பல்மணி - பல
மணிகளையும். உந்தி - செலுத்தி, பரந்து - பரவி. இழி - ஒழுகும். பாங்கர் -
பக்கம்.

     9. பொ-ரை: திருமகள் கேள்வனும், தாமரை மலர்மேல் உறையும்
நான்முகனும் காணாதவாறு பேரழற்பிழம்பாய் எழுந்து