பக்கம் எண் :

775

மருமலி மென்மலர்ச் சந்து
     வந்திழி காவிரி மாடே
பருமணி நீர்த்துறை யாரும்
     பாண்டிக் கொடுமுடி யாரே.           9
2220.







புத்தரும் புந்தியி லாத
     சமணரும் பொய்ம்மொழி யல்லான்
மெய்த்தவம் பேசிட மாட்டார்
     வேடம் பலபல வற்றால்
சித்தருந் தேவருங் கூடிச்
     செழுமலர் நல்லன கொண்டு
பத்தர்கள் தாம்பணிந் தேத்தும்
     பாண்டிக் கொடுமுடி யாரே.          10


நின்ற பெருமானார், மணம் கமழும் மென்மலர்கள், சந்தனம்
ஆகியவற்றுடன் வரும் காவிரித்துறையில் விளங்கும் பாண்டிக்கொடுமுடி
இறைவராவார்.

     கு-ரை: திருமகள் காதலினான் - இலக்குமி காதலரான திருமால்.
திகழ்தரு - விளங்குகின்ற. மாமலர் - தாமரைப்பூ. மேலை -
மேலிருத்தலையுடைய. பெருமகன் - பிதாமகன் (பிரமன்). அழல் - தீ.
மரு - மணம். மலி - மிக்க. சந்து - சந்தனமரம். மாடு - பக்கம். பரு -
பருத்த. மணித்துறை - நீர்த்துறை. துறைமணி உம் என்றும் துறை ஆரும்
என்றும் கொள்ளலாம். பெம்மான் கொடுமுடியாரே என்க. துறைஆரும்
பாண்டிக்கொடுமுடி.

     10. பொ-ரை: புத்தர் சமணர் ஆகியோர் பொய்மொழியல்லால்
உண்மைத்தவநெறிகளைப் பேசிடமாட்டார். அவருடைய பலப்பல
திருவடிவங்களைச் சித்தர் தேவர் முதலியோருடன் பத்தர்கள் நல்ல
செழுமையான மலர் கொண்டு பணிந்தேத்த விளங்குபவர்
பாண்டிக்கொடுமுடி இறைவர்.

     கு-ரை: புந்தி - அறிவு. மாட்டார் - வன்மையில்லாதவர்.
வேடம்பலபல வற்றால் - சிவமூர்த்தம், மகேசுரமூர்த்தம் எனப்
பற்பலவற்றால். சித்தர் - சித்துக்களில் வல்லவர். செழுமையுடைய
நல்ல மலர்களைக் கொண்டு பத்தர் (அன்பர்), சித்தர், தேவர்
எல்லோரும் ஏத்தும் தலம்.