பக்கம் எண் :

786

2235.







நாட்பலவுஞ் சேர்மதியஞ் சூடிப் பொடியணிந்த
     நம்பானம்மை
ஆட்பலவுந் தானுடைய வம்மா னிடம்போலும்
     அந்தண்சாரல்
கீட்பலவுங் கீண்டுகிளை கிளையன் மந்திபாய்ந்
     துண்டுவிண்ட
கோட்பலவின் றீங்கனியை மாக்கடுவ னுண்டுகளுங்
     குறும்பலாவே.                        2


ஐந்து’. யாழ்செய் - யாழோசைபோலும் இன்னோசை செய்கின்ற. குருந்தம் - குருந்தமரம்.

      குறும்பலா என்பது பலா வகைகளுள் ஒன்று. குற்றாலம், குறும்பலா
இரண்டும் திருக்குற்றால மலையிலுள்ள தலவிருட்சம். ‘வம்பார் குன்றம். .. . .
குற்றாலம்’ என்றும் ‘குன்றிடஞ்சூழ் தண்சாரற் குறும்பலா’ என்றும் இருவேறு
திருப்பதிகம் அருளியவாறு உணர்தற்பாலது.

     2. பொ-ரை: பதினாறுகலைகளும் வளர்தற்குரிய பிறைமதியை
முடியில் சூடித் திருநீற்றுப் பொடியணிந்த நம்மேல் விருப்புடைய இறைவன்,
நம்பால் வந்து நம்மை அடிமையாகக் கொண்டருளும் அம்மான். அவனது
இடம், அழகிய குளிர்ந்த மலைச் சாரலில் கீளத்தக்க பலவின் கனிகளை
மந்திகள் கீறித்தம் கிளைகள் பலவற்றோடு உண்டு வீழ்த்திய சுவையான
பலவின் இனிய சுளைகளை ஆண்குரங்குகள் உண்டு மகிழும்
குறும்பலாவாகும்.

      கு-ரை: நாள்பலவும் சேர்மதியம் - பூரண சந்திரன், “ பிள்ளை
மதியும் புனலும் சூடி” எனப்(பா.7) பின்வருதலறிக. நம்பான் - சிவபெருமான்.
‘நம்பான் மேய நன்னகர்’ (தி.1 ப.99 பா.1). ‘நடம் பயிலும் நம்பானே’
‘நல்லூர்ப் பெருமணம்மேய நம்பானே’ (தி.3 ப.125 பா.1). ஆட்பலவும் -
ஆலாகும் பலவகையும். கீள்பல-பிளத்தற்குரிய பலா. கீண்டு - பிளந்து,
(கிழி-கீழ்-கீள், கிழிந்து-கீழ்ந்து-கீண்டு). கிளை கிளையல்-கிளை கிளையாக.
கிளையின் என்றிருந்ததோ? மந்தி-பெண்குரங்கு. விண்ட - (நீங்கிய) பிளந்த.
கோள்-குலை. கடுவன்-ஆண்குரங்கு. உகளும் - துள்ளும். இது
பலாவிற்கேற்ற வருணனை.