பக்கம் எண் :

788

2238.







தலைவாண் மதியங் கதிர்விரியத் தண்புனலைத்
     தாங்கித்தேவி
முலைபாகங் காதலித்த மூர்த்தி யிடம்போலும்
     முதுவேய்சூழ்ந்த
மலைவா யசும்பு பசும்பொன் கொழித்திழியும்
     மல்குசாரல்
குலைவாழைத் தீங்கனியு மாங்கனியுந் தேன்பிலிற்றுங்
     குறும்பலாவே.                         5
2239.



நீற்றே துதைந்திலங்கு வெண்ணூலர் தண்மதியர்
     நெற்றிக்கண்ணர்
கூற்றேர் சிதையக் கடிந்தா ரிடம்போலுங்
     குளிர்சூழ் வெற்பில்


      கு-ரை: பிறை சூடியும், உமை மங்கையை இடப்பால் கொண்டும்
பாடியும் ஆடியும் எமனை உதைத்தும் நின்ற சிவ பெருமான் இடம். கல்
ஆம் வெற்பு - கற்கள் சூழ்ந்த மலை. குவளைகள் கண்போல் திறக்க.
அரற்றும் - ஒலிக்கும்., கோலம் - அழகு. மடம் - அழகு; மென்மை,
மஞ்ஞை - மயில். பேடை - பெண்மயில. ஆட்டு - ஆட்டம். அயரும் -
செய்யும்.

     5. பொ-ரை: தலையில் ஒளிவிரியும் வெண்மையான பிறையையும்
கங்கையையும் தாங்கி, உமாதேவியைக் காதலித்து ஒரு பாகமாகக்
கொண்டுள்ள சிவமூர்த்தியின் இடம், முதிய மூங்கில் சூழ்ந்துள்ள
மலையிடத்து நீர்க் கசிவுகள் பேரருவியாகப் பொன் கொழித்து ஒழுகுவதும்
பொருந்திய சாரலகத்தே வாழைக்குலையும் மாங்கனிகளும் தேன்
பிலிற்றுவதுமான குறும்பலா என்னும் கோயிலாகும்.

      கு-ரை: தலைமதியம், வான்மதியம். வான் - ஒளி. தலையில் மதியம்
கதிர்விரிய புனலைத்தாங்கி, பாகங் காதலித்த மூர்த்தி என்க. முதுவேய் -
முதிய மூங்கில். அசும்பு - பொசியுநீர். பிலிற்றும் -துளிக்கும்.

      6. பொ-ரை: திருநீற்றைப் பொருந்தி விளங்கும் முப்புரிநூலை
அணிந்தவரும் தண்மதியரும் நெற்றிக்கண்ணரும் காலனைக் கடிந்த
வரும் ஆகிய சிவபிரானது இடம், குளிர்ந்த மலையின்கண் ஆண்பன்றி,
பெண்பன்றியோடு கலந்து கீழிறங்கும் சாரலின்கண் கொம்புத்