பக்கம் எண் :

789

ஏற்றேன மேன மிவையோ டவைவிரவி
     யிழிபூஞ்சாரற்
கோற்றே னிசைமுரலக் கேளாக் குயில்பயிலுங்
     குறும்பலாவே.                      6
2240.







பொன்றொத்த கொன்றையும் பிள்ளை மதியும்
     புனலுஞ்சூடிப்
பின்றொத்த வார்சடையெம் பெம்மா னிடம்போலும்
     பிலயந்தாங்கி
மன்றத்து மண்முழவ மோங்கி மணிகொழித்து
     வயிரமுந்திக்
குன்றத் தருவி யயலே புனறதும்புங்
     குறும்பலாவே.     
                   7


தேன் சேகரிக்கும் வண்டுகள் இசைபாட அதனைக் கேட்டுக் குயில் கூவும்
குறும்பலாவாகும்.

     கு-ரை: நீற்றே - திருநீற்றிலே. வெள்நூல் - வெளிய முப்புரிநூல்.
கூற்று - எமன். ஏர் - எழுச்சி. சிதைய - கெட. ஏர் சிதைய - அழகு
கெட எனலுமாம். ஏறு+ஏனம். ஏற்றேனம் - ஆண்பன்றி. ஏனம் -(பெண்)
பன்றி, இவையோடு அவை விரவி - இவ்விலங்கு முதலியவற்றினினத்தொடு
அவ்விலங்கு முதலியவற்றினினம் கலந்து. இழி - கீழிறங்குகின்ற.
கோல்தேன் - கொம்புத்தேன். கேளா - கேட்டு.

     7. பொ-ரை: பொன் போன்ற கொன்றை மலர்க் கொத்துக்களையும்
இளமதியையும் கங்கையையும் சூடி, பின்னே கொத்தாக அமைந்த நீண்ட
சடையை உடைய எம்பெருமானது இடம், பிரளய வெள்ளம் போலப்
பெருகி மன்றத்தே அடிக்கப்படும் முழவம் போல ஒலித்து, மணி, வயிரம்
முதலியவற்றுடன் சொரியும் அருவியின் புனல்ததும்பும் குறும்பலாவாகும்.

     கு-ரை: பொன் தொத்த - பொன்போலும் பூங்கொத்துக்களையுடைய.
பிள்ளைமதி - இளம்பிறை. புனல் - கங்கை. பின்தொத்த - பின் கூடிய.
பிலயம் - பிரளயம். ‘கற்பமுறுபிரளயம் வந்து உலக மூன்றையும்
அழிக்குங்காலமேனும் தற்பரரின் திரிகூடம்போல் எனக்கும் அழியாமை
தருதல்வேண்டும்’ (திருக்குற்றாலத் தலபுராணம், குறும் பலாச்