2241.
|
ஏந்து
திணிதிண்டோ ளிராவணனை மால்வரைக்கீழ்
அடரவூன்றிச்
சாந்தமென நீறணிந்த சைவ ரிடம்போலுஞ்
சாரற்சாரல்
பூந்தணறு வேங்கைக் கொத்திறுத்து மத்தகத்திற்
பொலியவேந்திக்
கூந்தற் பிடியுங் களிறு முடன்வணங்குங்
குறும்பலாவே. 8
|
சருக்கம்.17). திருக்குற்றாலத்தின்
வீழும் அருவிகள் பிரளய வெள்ளம்
போல்கின்ற பெருக்கைத் தாங்குவன. மன்றத்தில் (மண்-) மார்ச்சனையை
உடைய முழவம்போல்கின்ற ஓசை மிக்கன. மணிகளைக் கொழிப்பன.
வயிரமணிகளை உந்தி ( - செலுத்தித் தள்ளி) வருவன. அவ்வருவிநீர்,
அயலிலுள்ள குறும் பலாவின்பால் ததும்பும்.
8.
பொ-ரை:
உயர்ந்த திண்ணிய தோள்களை உடைய
இராவணனைக் கயிலைமலையின் கீழ் அடர்த்தவரும், சாந்த மெனத்
திருநீற்றை விரவப்பூசியவருமாகிய சைவரது இடம், மழைச் சாரலை உடைய
மலைச்சாரலில் வேங்கைப்பூங்கொத்துக்களை ஒடித்து மத்தகத்தே அழகுற
ஏந்திப் பெண் யானையோடு ஆண் யானைகள் சேர்ந்து வணங்கும்
குறும்பலாவாகும்.
கு-ரை:
திணி - நெருங்கிய. திண் - திண்ணிய, உறுதியுடைய,
மால்வரை - பெரிய கயிலைமலை. சாந்தம் என நீறு அணிந்த:- சாந்தம்
ஈது என்று எம்பெருமான் அணிந்த நீறு (தி.1 ப.52 பா.7). சாரல் சாரல் -
மழைச்சாரலையுடைய மலைச்சாரலில். சாரல் தோறும் எனல் சிறவாது.
வேங்கைப் பூக்கள் தண்மை (குளிர்ச்சி)யும் நறுமை (நன்மை)யும் உடையன.
(நறுநாற்றம் - நன்னாற்றம்). இறுத்து - முறித்து. பிடி - பெண்யானைக்குக்
கூந்தல் உண்டென்பது மரபு. கூந்தல் மாலைக் குமரிப் பிடிக்குழாம்-
(சிந்தா. 858). கூந்தற்பிடிக்குழாம் (பா.11). நறைக்கூந்தற்பிடி
எனக்
குமரகுருபர முனிவர் (பா.45, 464) காலத்திலும் இவ்வழக்கம் இருந்தது.
களிறு (ஆண்யானையு)ம், பிடியும் வேங்கைப் பூக்களைப் பறித்து,
சிவபூஜைக்குரிய நெறியில் மத்தகத்தில் ஏந்திக்குறும்பலா நாதரை
வழிபடுகின்றன. அவ் விலங்குகட்குள்ள சிவபத்தி மக்கட் பிறப்பெய்தியும்
அடியேற்கு இல்லை. எப்பிறப்பில் உறுமோ?
|