2242.
|
அரவி
னணையானு நான்முகனுங் காண்பரிய
அண்ணல்சென்னி
விரவி மதியணிந்த விகிர்தர்க் கிடம்போலும்
விரிபூஞ்சாரல்
மரவ மிருகரையு மல்லிகையுஞ் சண்பகமு
மலர்ந்துமாந்தக்
குரவ முறுவல்செய்யுங் குன்றிடஞ்சூழ் தண்சாரற்
குறும்பலாவே. 9
|
|
|
2243.
|
மூடிய
சீவரத்தர் முன்கூறுண் டேறுதலும்
பின்கூறுண்டு
காடி தொடுசமணைக் காய்ந்தா ரிடம்போலுங்
கல்சூழ்வெற்பில்
நீடுயர் வேய்குனியப் பாய்கடுவ னீள்கழைமேல்
நிருத்தஞ்செய்யக்
கூடிய வேடுவர்கள் குய்விளியாக் கைமறிக்குங்
குறும்பலாவே. 10 |
9.
பொ-ரை: பாம்பணையானாகிய திருமாலும், நான்முகனும்
காணுதற்கு அரியவராக விளங்கிய தலைவரும், முடியில் பொருந்த இளம்
பிறையைச் சூடியவரும் ஆகிய விகிர்தருக்கு உரிய இடம். விரிந்த பூக்களை
உடைய மலைச்சாரலில் மரவம், மல்லிகை, சண்பகம் ஆகியன மலர்ந்து
நிற்க அவற்றின் தேனை உண்ணக் குரவமலர்ப் பாவை முறுவல் செய்வது
போல மலரும் குன்றினை அடுத்துள்ள குறும்பலாவாகும்.
கு-ரை:
அரவின் அணையான்-பாம்பின் படுக்கையை யுடைய
திருமால். காண்பு அரிய - காண்டற்கு அருமையாயுடைய. அண்ணல் -
சிவபெருமான். சென்னி - தலை. விரவி - கலந்து. மரவம் - குங்கும மரம்.
மாந்த - உண்ண, குடிக்க. குரவம் - குராமரம். முறுவல் செய்ய -
பற்களைப்போலப் பூக்க. (சிரிக்க என்ற பொருளும் தொனித்தல் அறிக).
10.
பொ-ரை: உடலைமூடிய சீவரம் என்னும் ஆடையை
அணிந்தவர்களும் முன்னால் அறுசுவை உணவுண்டு பின்னால் காடியைக்
கூறாக்கி உண்போரும் ஆகிய சமணர்களை வெறுத்த சைவராகிய
சிவபிரானது இடம் கற்கள் நிறைந்த மலையகத்தே நீண்ட மூங்கில்கள்
|