பக்கம் எண் :

792

2244.







கொம்பார் பூஞ்சோலைக் குறும்பலா மேவிய
     கொல்லேற்றண்ணல்
நம்பா னடிபரவு நான்மறையான் ஞானசம்
     பந்தன்சொன்ன
இன்பாய பாட லிவைபத்தும் வல்லார்
     விரும்பிக்கேட்பார்
தம்பால தீவினைகள் போயகல நல்வினைகள்
    தளராவன்றே.                    11


                    திருச்சிற்றம்பலம்

வளைந்து நிற்க, அவற்றில் குரங்குகள் நின்றுஆட, வேடர்கள் குய் என்று
ஒலிக்குறிப்போடு கூவிக் கை குவிக்கும் குறும்பலாவாகும்.

     கு-ரை: சீவரத்தார் - துவர் ஊட்டின சீலையை உடுத்தவர். உண்டு -
உட்கொண்டு. முன்கூறி பின்கூறி:- ‘அறுசுவையுண்டி, அமர்ந்து இல்லாள்
ஊட்ட மறுசிகை நீக்கி உண்டார்’ என்றது சைனர் கூற்று. காடி - காடிநீர்.
சமண் - சமணர். வேய் - மூங்கில். குனிய - வளைய. கடுவன் -
ஆண்குரங்கு. கழை - மூங்கிலின் கழை . நிருத்தம் - கூத்து. கூவி -
அழைத்து. ‘குய்விளியாக்’ ‘கூய் விளியாக்’ என்று பாடாந்தரம் உண்டு.
(சுவாமிநாத பண்டிதர் தலமுறைப் பதிப்பு. பக்கம். 911 பாக்க). வேடர்கள்
‘குய்’ என விளித்தல் உண்டு. கை மறிக்கும்;- கைகவிக்கும் ‘தக்கார் போற்
கைம்மறித்த காந்தள் அந்தோ தகாது எனவே’ (சிந்தா. 1227).
    

     11. பொ-ரை: பூங்கொம்புகளைக் கொண்ட மலர்ச் சோலைகளைக்
கொண்ட குறும்பலாவில் மேவிய கொல்லேற்றுத் தலைவனும், நம்மால்
விரும்பப்படுபவனுமாகிய சிவபெருமானின் திருவடிகளைப் பரவும்
நான்மறைவல்ல ஞானசம்பந்தன் அருளிய இன்பம் தரும் இப்பதிகப்
பாடல்களை ஓதவல்லவரும் விரும்பிக்கேட்பவரும் தம்பால் உள்ள
தீவினைகள் நீங்கப் பெற்று நல்வினைப் பயன்களைத் தளராது பெறுவர்.

    கு-ரை: ‘கொம்பார் சோலை’ (திருக்குற்றாலப் பதிகம். 1. பார்க்க).
ஏற்றண்ணல் - எருதூரும் பெருமான். நம்பான்:- (பா.2 பார்க்க).
நம்பன்-உயிர்களின் நசைக்கு உரியவன். ‘நம்பும் மேவும் நசையாகும்மே’
(தொல். சொல். உரிச். 33). இன்பு ஆய பாடல் -பேரின்பமயமான
திருப்பாக்கள். தம்பால - தம் இடத்திலுள்ள. தளரா -தளராமல் வளரும்.