பதிக
வரலாறு:
ஆளுடைய
பிள்ளையார் கொங்கிற் குடபுலம் சென்று பல
சிவதலங்களை வணங்கிக் கொடிமாடச் செங்குன்றூர்க்கு அடியவரும்
ஏனையவரும் சிறப்புற வரவேற்கச் சென்றடைந்து வழிபட்டு இனிதிருந்தார்.
அதன் புறத்துள்ள சிவதலங்களை வணங்குங்கால் திருநணாவினை
இறைஞ்சிப் பரவிப் பாடியருளியது இத்திருப்பதிகம்.
பண்:
காந்தாரம்
ப.தொ.எண்:
208 |
|
பதிக
எண்: 72 |
திருச்சிற்றம்பலம்
2245.
|
பந்தார்
விரன்மடவாள் பாகமா நாகம்பூண்
டேறதேறி
அந்தா ரரவணிந்த வம்மா னிடம்போலும்
அந்தண் சாரல்
வந்தார் மடமந்தி கூத்தாட வார்பொழிலில்
வண்டுபாடச்
செந்தேன் றெளியொளிரத் தேமாங் கனியுதிர்க்குந்
திருநணாவே. 1 |
1. பொ-ரை:
பந்தாடும் விரலைஉடைய உமையம்மை ஒரு பாகமாக
விளங்க, பாம்பை அணிகலனாகப் பூண்டு, எருதேறி, அழகிய மாலையாக
அரவத்தைப் பூண்டுள்ள சிவபிரானது இடம், அழகிய குளிர்ந்த
மலைச்சாரலின் அருகே மந்திகள் நடனமாடவும் பூம்பொழிலில் வண்டுகள்
பாடவும் செந்தேனின் தெளிவில் தோய்ந்த மாங்கனிகள் உதிரும்
வளமுடைய திருநணாவாகும்.
கு-ரை:
பந்து ஆர் விரல் மடவாள் - பந்தார் விரலி பந்தமரும்
விரல் மங்கைநல்லாள் பந்தார் விரலுமையாள் பந்துலாவிரற்
பவள
வாய்த் தேன்மொழிப் பாவை பந்துசேர் விரலாள் எனப்பிற இடத்திலும்
அருளியிருத்தலறிக. பாகம் - இடப்பக்கம். நாகம் - பாம்பு. ஏறது -
இடபவாகனம். அம்தார் அரவு அணிந்த - அழகிய பாம்புகளை
மாலைபோல் அணிந்த. அம்மான் - அருமகன் என்பதன்மரூஉ. அம்
|