2246.
|
நாட்டம்
பொலிந்திலங்கு நெற்றியினான் மற்றொருகை
வீணையேந்தி
ஈட்டுந் துயரறுக்கு மெம்மா னிடம்போலும்
இலைசூழ்கானில்
ஓட்டந் தருமருவி வீழும் விசைகாட்ட
முந்தூழோசைச்
சேட்டார் மணிக ளணியுந் திரைசேர்க்குந்
திருநணாவே. 2 |
2247.
|
நன்றாங்
கிசைமொழிந்து நன்னுதலாள் பாகமாய்
ஞாலமேத்த
மின்றாங்கு செஞ்சடையெம் விகிர்தர்க் கிடம்போலும்
விரைசூழ் வெற்பில் |
மஹாந் என்பதன் திரிபெனல்
பிழை. பெம்மான் என்பது பெருமகாந்
என்பதன் திரிபெனல் இ்ல்லை. எம்மான், தம்மான், கோமான்
என்பவற்றில் மகன் என்பதே திரிந்தது. வந்து - காற்று. மந்தி -
குரங்கு. தெளி - தெளிவு. தேமா - தித்திக்கும் மா - எழுவாய். கனி -
செயப்படுபொருள். உதிர்க்கும் :- பயனிலை.
2.
பொ-ரை: அழகியதொரு கண் பொலிந்து விளங்கும்
நெற்றியினரும், ஒருகையில் வீணை ஏந்தியவரும், பழவினைத்
தொகுப்பினைத் தீர்த்தருள்பவரும் ஆகிய எம் இறைவனது இடம்,
இலைகள் அடர்ந்த காட்டில் மலை அருவி இசைகாட்ட, மூங்கில்கள்
உராய்ந்து ஓசை எடுப்ப உயர்ந்த மணிகளைவாரி அலைகள்
கரைகளில் சேர்க்கும் திருநணாவாகும்.
கு-ரை:
நாட்டம் - கண், தீவிழி. வீணையேந்தி:- மிக நல்ல
வீணைதடவி (பதி. 221-1). ஈட்டும் துயர் - ஆகாமியகன்மம்
(சஞ்சிதமாய்ப் பிராரப்தம்) ஆகுந்துயரம். கான் - காடு. விசை - வேகம்.
முந்தூழ் - மூங்கில். சேடு ஆர் - (மலையின்) உயரத்தில் பொருந்திய.
திரை - அருவியின் அலைகள்.
3.
பொ-ரை: திருத்தமான இசையுடன் வேதங்களை அருளி,
உமையொரு பாகராய் மின்னல் போன்ற செஞ்சடையினராய் விளங்கும்
சிவபிரான் உலகம் ஏத்த விளங்கும் இடம், மணம் கமழும் மலை
யகத்தே குன்றுகள் போல அருவியின் திரைகள் எழுந்து மோத
|