பக்கம் எண் :

795

குன்றோங்கி வன்றிரைகண் மோத மயிலாலுஞ்
     சாரற்செவ்வி
சென்றோங்கி வானவர்க ளேத்தி யடிபணியுந்
     திருநணாவே.                     3
2248.







கையின் மழுவேந்திக் காலிற் சிலம்பணிந்து
     கரித்தோல்கொண்டு
மெய்யின் முழுதணிந்த விகிர்தர்க்கிடம்போலு
     மிடைந்துவானோர்
ஐய வரனே பெருமா னருளென்றென்
     றாதரிக்கச்
செய்ய கமலம் பொழிதே னளித்தியலுந்
     திருநணாவே.                     4


மயில்கள் ஆட வானவர்கள் சாரலை அடைந்து ஏத்தி வணங்கும்
சிறப்பினதாகிய திருநணாவாகும்.

     கு-ரை: நன்று ஆங்கு இசைமொழிந்து - நன்றாக இசையுடைய
சாமவேதத்தைப் பாடியருளி. வேதங்களைத் தோற்றுவித்தருளி எனலும்,
இசையைத் தோற்றியருளி எனலும் ஆம். மொழிந்து ஆய் ஏத்தத்தாங்கு
செஞ்சடை விகிர்தர் என்று இயைக்க. நன்னுதலாள் - உமா தேவியார்.
ஞாலம் - பூமியிலுள்ளோர். உலகோர் எனலுமாம். மின் - ஒளி. விரை -
மணம். வெற்பு - மலை. குன்று ஓங்கி வல்திரை (அலை)கள் மோத
மயில் ஆலும் சாரல். செவ்வி - அழகு.

     4. பொ-ரை: கையின் மழுவை ஏந்தி, காலில் சிலம்பை அணிந்து,
யானையின் தோலைப் போர்த்து விளங்கும் விகிர்தனுக்குரிய இடம்,
தேவர்கள் கூடிநின்று ‘ஐயனே! அரனே! பெருமானே! அருள்புரிக, என்று
விரும்பிப் போற்றுவதும், செந்தாமரை மலர்கள் தேனைத் தருவதுமாகிய
திருநணாவாகும்.

     கு-ரை: கரி - கரத்தையுடையது, யானை. யானைத்தோலை உடம்பு
முழுதும் மறையப் போர்த்தார் என்றவாறு. கைம் மழு, காற்சிலம்பு,
மெய்ப்போர்வை. மிடைந்து - நெருங்கி. ‘ஐயனே’ அரனே! பெருமானே!
அருள் என்று வானோர் விரும்பிப் போற்ற. செய்ய கமலம் - செந்தாமரை.
பொழி - வெளிப்படுத்தும் தேன்தரும் என்றபடி.