2249.
|
முத்தேர்
நகையா ளிடமாகத் தம்மார்பில்
வெண்ணூல்பூண்டு
தொத்தேர் மலர்சடையில் வைத்தா ரிடம்போலுஞ்
சோலைசூழ்ந்த
அத்தே னளியுண் களியா லிசைமுரல
ஆலத்தும்பி
தெத்தே யெனமுரலக் கேட்டார் வினைகெடுக்குந்
திருநணாவே.
5 |
2250.
|
வில்லார்
வரையாக மாநாக நாணாக
வேடங்கொண்டு
புல்லார் புரமூன் றெரித்தார்க் கிடம்போலும்
புலியுமானும் |
5.
பொ-ரை: முத்துப் போன்ற பற்களை உடைய
உமையம்மை
ஒருபாகமாக விளங்கத் தம் மார்பில் வெண்ணூல் பூண்டு
பூங்கொத்துக்களைச் சடைமிசைச்சூடியுள்ள சிவபிரானது இடம், சோலைகளில்
சூழ்ந்த வண்டுகள் தேனுண்ணும் விருப்பினால் இசைபாடி ஆட, தும்பிகள்
தெத்தே என்ற ஒலிக்குறிப்போடு முரலல் விளங்கும் அழகுடையதும் பெயர்
சொல்லக் கேட்டார் வினைகளைக் கெடுப்பதும் ஆகிய திருநணாவாகும்.
கு-ரை: முத்து ஏர் நகையாள் - முத்தினைப்போலும்
பற்களையுடைய
உமாதேவியார். திருமார்பிற் பூணுநூல் பூண்டிருப்பது முன்னும் பின்னும்
சிற்சில பதிகங்களிற் கூறப்படுகின்றது. தொத்து-(பூங்) கொத்து, ஏர் - அழகு.
மலர் - கொன்றை (யும் பிறவும்). சடையமர் கொன்றையினார் (தி.2 ப.205.
பா.3). கடிபடு கூவிளமத்தங் கமழ்சடை மேலுடையார் (ஷ.6). அளி -
வண்டுகள். களி - கள்ளுண்ட (மயக்கம்) களிப்பு. ஆல - ஒலிக்க. தெத்தே
என்பது அநுகரணம். கேட்டார் வினைகெடுக்கும் - செவிமடுத்த
நல்வினையாளரது தீவினையைப் போக்கும்.
6.
பொ-ரை: மேருமலை வில்லாகப் பொருந்த, வாசுகி என்னும்
பெரிய பாம்பு நாணாக அமைய, தான் பெருவீரனாக வேடம்புனைந்து
அவுணர்தம் முப்புரங்களையும் எரித்தவனது இடம், புலி மான் இவையும்
அல்லாத பிறவிலங்கினங்கள் யாவும் திருவடிகளைக்
|