|
அல்லாத
சாதிகளு மங்கழன்மேற் கைகூப்ப
அடியார்கூடிச்
செல்லா வருநெறிக்கே செல்ல வருள்புரியுந்
திருநணாவே. 6 |
2251.
|
கானார்
களிற்றுரிவை மேன்மூடி யாடரவொன்
றரைமேற்சாத்தி
ஊனார் தலையோட்டி லூணுகந்தான் றானுகந்த
கோயிலெங்கும்
நானா விதத்தால் விரதிகணன் னாமமே
யேத்திவாழ்த்தத்
தேனார் மலர்கொண்டடியா ரடிவணங்குந்
திருநணாவே. 7 |
கைகூப்பி வணங்க,
அடியவர்கூடி வழிபடுவதும், யாரும் செல்ல இயலாத
வீட்டு நெறிக்குச் செல்ல இறைவன் அருள் புரிவதும் ஆகிய திருநணாவாகும்.
கு-ரை:
வில் ஆர் வரை ஆக - மேருமலை வில்லாகப் பொருந்த.
மாநாகம் நாண் ஆக - பெரிய பாம்பு விற் கயிறாக. புல்லார் - தழுவாத
(பகை)வர் புலி, மான் இரண்டும் பகை நீங்கி நட்புற்று வழிபடுதல் போல,
அவை அல்லாத விலங்கினங்களும் திருவடியைக் கைகுவித்து
வழிபடுகின்றன.
அதுவே அன்றி,
அடியார்கட்கு அச்சம் முதலியன உளவாகா
வண்ணம், அவர்கள் போகாத வழியிலே போகின்றன. சிவபக்தியும், உடைய
விலங்கினங்கட்குள்ள நல்வினை அடியேனுக்கில்லையே; இவ்வுயரிய மக்கட்
பிறப்பை எய்தியும், அவனருளாலே அவன் தாள் வணங்க அவனருள்
செய்தல் வேண்டும். அதற்கு நாம் பெருந்தவம் புரிதல் வேண்டும். கழல் -
திருவடிக்கு ஆகுபெயர்.
7. பொ-ரை:
காட்டில்
வாழும் யானையின் தோலால் உடலை மூடி,
ஆடும்பாம்பினை அரைமேல் கட்டி, ஊன் பொருந்திய தலையோட்டில் பலி
ஏற்று உகப்பவராகிய சிவபிரான் உவப்புடன் மேவும் கோயில் தவவிரதிகள்
எங்கும் பல்வேறு வகைகளில் திருப்பெயர்
|