2252.
|
மன்னீரிலங்கையர்தங்
கோமான் வலிதொலைய
விரலாலூன்றி
முந்நீர்க் கடனஞ்சை யுண்டார்க் கிடம்போலு
முனைசேர்சீயம்
அன்னீர் மைகுன்றி யழலால் விழிகுறைய
வழியுமுன்றிற்
செந்நீர் பரப்பச் சிறந்து கரியொளிக்குந்
திருநணாவே. 8 |
களைச் சொல்லி வாழ்த்த
அடியவர் தேன்சிறந்த மலர்களைக் கொண்டு
மகிழ்ந்து அடி வணங்குவதாகிய திருநணாவாகும்.
கு-ரை:
கான் - காடு. ஆர் - பொருந்திய, நிறைந்த. களிறு
உரிவை - யானைத்தோல். மேல்மூடி - உடம்பின்மேல் போர்த்து மறைத்து.
ஆடு அரவு - ஆடும் பாம்பு. சாத்தி - சார்த்தி (கட்டி). ஊன் ஆர் தலை
ஓட்டில் - மாமிசத்தொடு கூடிய பிரமகபாலத்தில். ஊண் - உண்ணுதலை.
உகந்தான் - விரும்பினவன். உகந்த - விரும்பி எழுந்தருளியுள்ள. நானா
விதத்தால் - பலவகையால். விரதிகள் -தவத்தோர்கள், யாகத்தோர்கள்.
நல்நாமமே - பிறவிப்பிணிக்கு மருந்தாகிய திருவைந் தெழுத்தையே,
அடியார் அடி:- எழுவாய்த் தொடரும் ஆறன்றொகை நிலைத் தொடரும்
ஆம்.
8.
பொ-ரை: பெருகிய கடல் நீரால் சூழப்பட்ட இலங்கை மன்னன்
இராவணனின் வலிமை அழியுமாறு கால் விரலை ஊன்றி அடர்த்தவரும்,
கடலிடையே தோன்றிய நஞ்சினை உண்டவருமாகிய சிவபெருமானுக்குரிய
இடம், மலைக் குகையில் வாழும் சிங்கம் தன் தன்மைக்குன்றி அழல்
பொழியும் தன் விழி குறைய அதனோடு போரிட்டு முன்றிலில் படிந்த
அதனது குருதியைக் கண்டு தன் வலிமையில் பெருமை பெற்ற யானை
சென்று மறையும் திருநணாவாகும்.
கு-ரை:
மன்நீர் - மிக்க நீர். நிலைபெற்ற நீர் (கடல்). முனை -
பகை. சீயம்-சிங்கம். அல் - இரவு. நீர்மை - தன்மை. குன்றி - குறைந்து.
அழல் - நெருப்பு.
முன்றில் - முற்றம்.
செந்நீர் - இரத்தம். கரி - யானை, சிங்கத்தின்
தொலைவும் யானையின் வெற்றியும் குறிக்கப்பட்டன.
|