2253.
|
மையார்
மணிமிடறன் மங்கையோர் பங்குடையான்
மனைகடோறும்
கையார் பலியேற்ற கள்வ னிடம்போலுங்
கழல்கணேடிப்
பொய்யா மறையானும் பூமிய ளந்தானும்
போற்றமன்னிச்
செய்யா ரெரியா முருவ முறவணங்குந்
திருநணாவே. 9
|
|
|
2254.
|
ஆடை
யொழித்தங் கமணே திரிந்துண்பார்
அல்லல்பேசி
மூடுருவ முகந்தா ருரை யகற்று
மூர்த்திகோயில் |
9.
பொ-ரை: கரிய நீலமணிபோன்ற மிடற்றினனும், உமைபாகனும்
வீடுகள் தோறும் பலியேற்றுப் பலியிடுவார் உள்ளங்களைக் கவரும்
கள்வனும் ஆகிய சிவபெருமானது இடம் திருமுடி திருவடிகளைத் தேடி
வேதங்களை ஓதும் நான்முகனும் நிலம் அளந்த திருமாலும் போற்ற
நிலைபேறுடைய செந்தீயுருவாய் உருவம் பெற அவர்கள் இருவரும்
அப்பெருமானது அடிமுடி காணல் ஆற்றாது வந்து வழிபடும்
திருநணாவாகும்.
கு-ரை:
மை ஆர் மணிமிடறன் - கருமை நிறைந்த நீலமணி
போலும் திருக்கழுத்துடைய சிவபிரான். மேகத்தைப்போலும் அழகிய
கண்டன் எனலுமாம். நேடி - தேடி. பொய்யாமறை - வேதம். மன்னி -
நிலைத்து. செய் - செம்மை. எரியாம் உருவம் - தீப்பிழம்பு வடிவம்.
விடமுண்ட ஆற்றலுடையவன் பலியேற்று உண்ணல் வேண்டா.
மங்கைபங்கன், தன்பால் இரப்பவர்க்கு ஈதல் வேண்டும். அவன்,
மனைகள் தோறும் சென்று இரப்பது, மங்கையுடைமைக்கு ஏலாது. தன்
கோலத்திற்கு ஒவ்வாத செயலை மேற்கொண்டதால் அதற்கு ஓர் ஏது
வெளிப்படாதிருத்தலைக் குறிக்கக் கள்வன் என்றார்.
10.
பொ-ரை: ஆடையின்றி அம்மணமாகத் திரிந்து இரந்து
உண்பவரும் துன்பமான செய்திகளைப் பேசி உடலைப் போர்த்தித்
திரிபவரும் ஆகிய அமணர், பத்தர்களின் உரைகளைச் செவி மடுக்காத
சிவமூர்த்தியின் கோயில், பெருகி ஓடும் நதி, முத்து, அகில்
முதலியவற்றைக் கரையில் சேர்ப்பதும், பெரியோர் சிறப்புடன் வந்து
வழிபடுவதும், கட்புலனாய் ஒளிபெருகி விளங்குவதுமாகிய திருநணாவாகும்.
|