|
ஓடு
நதிசேரு நித்திலமு மொய்த்தகிலுங்
கரையிற்சாரச்
சேடர் சிறந்தேத்தத் தோன்றி யொளிபெருகுந்
திருநணாவே. 10 |
2255.
|
கல்வித்
தகத்தாற் றிரைசூழ் கடற்காழிக்
கவுணிசீரார்
நல்வித் தகத்தா லினிதுணரு ஞானசம்
பந்தனெண்ணும்
சொல்வித் தகத்தா லிறைவன் றிருநணா
வேத்துபாடல்
வல்வித் தகத்தான் மொழிவார் பழியிலரிம்
மண்ணின்மேலே. 11 |
திருச்சிற்றம்பலம்
கு-ரை:
ஆடை. . . உண்பார் என்பது திகம்பர சைனரையும் மூடும்
உருவம் உகந்தார் என்பது சுவேதாம்பர சைனரையும் தேரரையும் குறித்தன.
நித்திலம் - முத்து. அகில் - அகில் மரம். சேடர் - பெரியோர். தோன்றி -
செங்காந்தள். கொய்ம்மலர தோன்றி போற்சூட்டுடைய சேவலும்
(சீவகசிந்தாமணி. 73).
11. பொ-ரை:
கரையை அகழும் வித்தகத்தோடு அலைகள் சூழும்
கடலை அடுத்துள்ள காழிப்பதியில் கவுணியர் குலத்தில் தோன்றி நல்ல
ஞானத்தால் எல்லாவற்றையும் இனிதுணரும் ஞானசம்பந்தன் கருதிச் சொல்
வித்தகத்துடன் இறைவனது திருநணாவை ஏத்திய இப்பதிகப்பாடல்களை
மேம்பட்ட இசைத் திறமையால் பாடிப் போற்றுவார் இவ்வுலகில்
பழியிலராவர்.
கு-ரை:
கல் வித்தகத்தால் - கல்லயங்குதிரை சூழநீள்கலிக்காழி
(தி.2 ப.211 பா.4). கற்சாதுரியத்தால் என்பது பொருளாயினும் ஈண்டுப்
பொருந்தாது. வித்தகம்-பெருமை; சிற்பம் முதலிய சிறந்த தொழில், அதிசயம்
என்னும் பொருள்களுள் ஏதேனும் பொருந்தும், காழிச்சிறப்பாகும்.
திரைசூழ்கடல் என்பது காழிக்கு அடையாதல் கடலில் மிதந்ததும்
கடலருகிலிருந்ததும் பற்றி. நல்வித்தகத்தால் - நல்ல ஞானத்தால், எண்ணும்
சொல்வித்தகத்தால் - கருதிய சொற்சாதுரியத்தால். வல்வித்தகத்தால் -
இசையில், பொருளில், அன்பில் வலிய சாதுரியத்தால். இம்மண்மேல் பழி
இல்லாதவர் ஆவர்.
|