பதிக
வரலாறு:
திருநாவுக்கரசு
நாயனாரும் திருஞானசம்பந்த மூர்த்திகளும்
சீகாழியில் மின்னார்சடை அண்ணலை வணங்கி, சொல்மாலைகள்சாத்தி
மகிழ்வெய்தி, சிலநாள் உடனிருந்து திரு வருள் வாழ்வை நடாத்தினர்.
பின்னர், அரசர் பலபலதலங்களை வழிபடச் சென்றார். கவுணியர் சீகாழியில்
உறைகின்ற நாளில் செந்தமிழ் மாலை விகற்பச் செய்யுட்களால் மொழிமாற்று,
மாலைமாற்றுஏகபாதம் முதலியவற்றைப் பாடுங்கால் அருளியது
திருச்சக்கரமாற்று என்னும் இத்திருப்பதிகம்.
திருச்சக்கரமாற்று
பண்:
காந்தாரம்
ப.தொ.எண்: 209
பதிக
எண்: 73
திருச்சிற்றம்பலம்
2256.
|
விளங்கியசீர்ப்
பிரமனூர் வேணுபுரம்
புகலிவெங்
குருமேற்சோலை
வளங்கவருந் தோணிபுரம் பூந்தராய்
சிரபுரம்வண்
புறவமண்மேல்
களங்கமிலூர் சண்பைகமழ் காழிவயங்
கொச்சைகழு
மலமென்றின்ன
விளங்குமரன் றன்னைப்பெற் றிமையவர்தம்
பகையெறிவித்
திறைவனூரே. 1 |
1.
பொ-ரை: இத்திருப்பதிகம் சீகாழியின் பன்னிருதிருப்
பெயர்களை
மாறிமாறிவரப் பாடியருளியது. இளங்குமரனாகிய முருகக்கடவுளைப் பெற்றுத்
தேவர்களின் பகைவர்களாகிய சூரபன்மன் முதலானோரை அழியச்
செய்தருளிய சிவபிரானது ஊர், விளங்கிய புகழை உடைய பிரமனூர்
வேணுபுரம் முதலான பன்னிரு பெயர்களை உடைய சீகாழிப் பதியாகும்.
கு-ரை:
இப்பதிகத்திலும் அடுத்த பதிகத்திலும் 206-ஆவது பதிகத்தின்
முதற்பாட்டிலுள்ள முறையே பன்னிரு திருப்பெயரும்
|